Wednesday, April 24, 2024
-- Advertisement--

கள்ளக்குறிச்சியில் கலவரம் செய்பவர்கள் கலைந்து செல்லுங்கள்..!!! வீடியோ ஆதாரம் எங்களிடம் இருக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக DGP சைலேந்திர பாபு..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழப்பு நியாயம் கேட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அமைதியாக நடந்த போராட்டம் திடீரென்று வன்முறையாக மாறியது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் கனியமூரில் தனியார் பள்ளி ஒன்றில் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வந்து இருக்கிறார். அந்த மாணவி கடந்த ஜூன் 13 ஆம் தேதி அன்று மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் பெற்றோர்கள் சார்பில் போலீசாருக்கு கொடுக்கப்பட்டது.

இது தற்கொலை இல்லை கொலையாக இருக்கும் என்று பெற்றோர்கள் மாணவியின் உடலை ஐந்து நாட்களாக வாங்க மறுத்து வந்தனர். பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். சென்னையில் இருந்து சேலம் செல்லும் ஹைவே சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் திடீரென்று போராட்டக்காரர்கள் தீவைத்து பள்ளி உடமைகளை சேதப்படுத்தி அடித்து நொறுக்கி வந்தனர்.

போராட்டக்காரர்கள் மாணவியின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் அந்த மனைவி பள்ளியில் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு உள்ளார் அதற்கு இதுதான் சாட்சி என்று கூறிவருகின்றனர்.

அமைதியாக நடந்த போராட்டம் திடீரென்று வன்முறையாக மாரி டிராக்டர்களை வைத்து பள்ளியின் வாகனங்களை தகர் எறிந்தார்கள். இது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறுகையில் மற்ற பகுதியில் இது தொடர்பான எந்த ஒரு போராட்டமும் தேவையில்லை என்று காவல்துறை சார்பில் கூறுகிறோம் நியாயமான சரியான நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பள்ளி மாணவி இறந்தது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இருதரப்பிலும் நீதிமன்றத்தில் வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. நாளை விசாரணை நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்னே போராட்டம் என்ற பெயரில் சில நபர்கள் பள்ளிக்கூடத்தை தாக்க முயற்சி செய்திருக்கிறார்கள் அதனை காவல்துறை அதிகாரிகள் தடுத்துள்ளார்கள்.

இந்த போராட்டத்திற்காக DIG தலைமையில் சுமார் 350 காவலர்கள் அங்கே நிறுத்தபட்டு இருந்தார்கள் அதையும் மீறி இவர்கள் பள்ளிக்கூடத்து மீதும் காவல்துறை வாகனத்தின் மீதும் காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். தற்பொழுது 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து உள்ளார்கள்.

இன்னும் சில நேரங்களில் இந்த பிரச்சனை கட்டுக்குள் வரும் எந்த ஒரு காரணமும் இல்லாமல் புலன் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கும் போது ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் இதுபோன்ற வன்முறையில் ஈடுபட்டதை கண்டிக்கிறோம் கடுமையான நடவடிக்கை எடுப்போம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் காலப்போக்கில் வீடியோ பதிவை வைத்து அவர்களை தொடர்ந்து கைது செய்வோம் என்று கூறி உள்ளார்.

மற்ற பகுதியில் உள்ளவர்கள் தயவுசெய்து இந்த புலன்விசாரணை ஆதாரத்தின் அடிப்படையில் தான் நடந்து வருகிறது அந்த மாணவியின் கடிதம் கிடைத்துள்ளது அந்த கடிதத்தில் மாணவி தனக்கு படிக்கிறதுக்கு பிடிக்கல EQUATION வரல கெமிஸ்ட்ரி MATHS படிக்கச்சொல்லி பிரஷர் கொடுக்கிறார்கள் அப்படிதான் கூறி உள்ளார்.

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஆசிரியர் பெருமக்கள் எல்லாம் கைது செய்ய முடியாது. எனவே கலவரம் செய்பவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம் இதற்கு மேல் நின்று கலவரம் செய்தால் உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமாக இந்த கலவரத்தை செய்தவர்களை கைது பண்ணுவோம் அவர்களிடம் சேதமடைந்த பொருளின் பணத்தை வசூல் செய்து நீதிமன்றத்தில் நிறுத்து தண்டனை வாங்கி தருவோம்.

காவலர்களும் இவர்களால் தாக்கப்பட்டு உள்ளார்கள். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று கூறியிருந்தார். இந்த வழக்கைப் பொறுத்தவரை தொடர்ந்து புலன் விசாரணை நடந்து வருகிறது ஏதாவது மாணவிகள் பாதித்திருந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. தற்பொழுது நியாமான முறையில் விசாரணை நடந்து வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles