காஜல் அகர்வால் தமிழ் சினிமா மற்றும் இல்லை தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகை அந்தஸ்தில் உள்ள ஒரு நடிகை. இவருடைய தங்கை நிஷா அகர்வால் 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
நிஷாவிற்கு 2018 ஆம் அன்று ஒரு குழந்தையும் உள்ளது. அந்த குழந்தை மீது அலாதி பிரியம் கொண்ட காஜல் அடிக்கடி தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரை சந்தித்து தனகை மகனுடன் விளையாடி அதனை புகைப்படமாக வெளியிடுவார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எப்போது உங்களுக்கு திருமணம் என்று காஜலை கேட்டு வந்தனர்.

நீண்ட காலமாக திருமணத்தை பற்றி யோசிக்காமல் படத்தில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த காஜல். இன்று ஒரு இன்ப செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு உள்ளார். வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி தொழிலதிபர் கவுதம் கிட்சலு என்பவரை திருமணம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளார் காஜல்.

