தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் சிவகுமார். இவர் நடிப்பில் வந்த பல படங்கள் வெற்றியை கொடுத்துள்ளன. அவரது மகன் சூர்யா தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேல் முன்னணி நாயகர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது தம்பி கார்த்தியும் வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு முன்னணி நடிகர்களில் ஒருவராக நடித்து கொண்டிருக்கிறார்.

இயக்குனர் அமீர் இயக்கிய இயக்கிய பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கார்த்திக். அதன் பிறகு இவருக்கு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. பார்க்கும்பொழுது பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் உள்ளதாக கூறி வருகின்றது. இவர் சினிமா வாழ்க்கையில் சமீபத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்த படம் கைதி. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
வித்தியாசமான கதை களம் கொண்ட இந்த படம் முதலில் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் மன்சூரலிகான் மனதில் வைத்துதான் கதை எழுதினாராம். அதன் பின் தயாரிப்பாளர் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்கலாம் என்று கூற தான் கார்த்தி இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். தற்போது இந்த செய்தி லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
