Monday, August 17, 2026
-- Advertisement--

குரு பெயர்ச்சி 2025 2027 – கடகம் ராசிக்கு எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கோங்க!

கடகம் ராசிக்காரர்களே இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு எவ்வித பலன்களை தரும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு ரொம்ப நாட்களுக்கு முன்னாடி இருந்த மன அழுத்தம் தீரும் அதே சமயம் ஆடி மாதம் 14 முடியும் வரைக்கும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வண்டியில் கவனமாக செல்ல வேண்டும் மேலதிகாரிகள் தேவையில்லாத குழப்பம் எல்லாம் செய்வார்கள் அதில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கடகத்திற்கு ஆடி வரைக்கும் ரோஷமாக இருந்தால்தான் படிப்படியாக நல்லது ஏற்படும்.

அதேபோல் கடகத்துக்கு பனிரெண்டாம் இடத்தில் குரு வருவதுனால் விலை உயர்ந்த பொருட்கள் கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் சுப விரயம் ஏற்படும். அதேபோல் உங்களுக்கு சந்திரன் ஆட்சி அதனால் ஏதாவது யோசனை இருந்து கொண்டே இருக்கும். வாகனம் ஓட்டும்போது, குளிக்கும்போது, பல் தேய்க்கும்போது, சாப்பிடும்போது என நிம்மதியாகவே இருக்க மாட்டீர்கள் யோசித்துக் கொண்டே இருப்பீர்கள்.

ஏதோ ஒரு வருடம் திட்டமெல்லாம் போடுவீர்கள் அது தேவையே கிடையாது சொன்னாலும் கேட்க மாட்டீர்கள். வயிற்றை கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக முதுகுத்தண்டு கால் பகுதிகளுக்கு உடற்பயிற்சி செய்துக்கொள்வது மிக்க நல்லது அஷ்ட சனி விலகி விட்டது. ஆடி மாசத்திற்கு பிறகு உங்கள் ஆட்டம் ஆரம்பிக்கும் அதுவரைக்கும் பொறுத்துக் கொள்ள வேண்டும் வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். வேற்று மொழி மனிதர்களால் அதிகம் ஆதாயம் பெறுவீர்கள் கடல் கடந்த தொழில் உத்தியோகம் வியாபாரம் எல்லாம் செய்வீர்கள் கண்டிப்பாக புதிய பலரால் பாராட்டப்படும் கண்டிப்பாக கடன் வரும்.

பரிகாரம்

ஆலங்குடி அல்லது குரு ஸ்தலத்திற்கு இன்று 50 கிராம் விபூதி, 50 கிராம் குங்குமம், ஒரு நெய்யோ நல்லெண்ணையோ வச்சு வழிபட்டு வாங்கி வந்தால் பெரிய அற்புதம் ஏற்படும்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles