ஜோதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் இவரும் ஒருவர். SJ சூர்யா இயக்கத்தில் அறிமுகமான ஜோதிகா முதல் படம் தல அஜித்தின் வாலி என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஜோதிகா மக்களிடம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யா இயக்கும் அடுத்த படமான குஷி படத்தின் வாய்ப்பைப் பெற்றார்.

அதேபோல ஜோதிகாவும் நிறைய தமிழ் பட வாய்ப்புகள் பெற்று தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன்பின் சூர்யாவுடன் காதல் பிறகு திருமணம் என்று அவரது வாழ்க்கை ஒரு பக்கம் போய்க் கொண்டிருந்தது.

தற்போது ஜோதிகவிற்கு தேவ் , தியா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு திரையில் தலைகாட்டாமல் சினிமாவை விட்டு விலகியிருந்த ஜோதிகா தற்பொழுது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருக்கிறார்.

நடிகர் சூர்யாவுடன் இணைந்த 2D என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். தற்போது ஜோதிகா காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதில் மலையாள நடிகர் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்த வருகிறார்.

இப்படத்திற்குப் பிறகு ஹிந்தியில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். குழந்தைகள் மும்பையில் படிப்பதால் அங்கேயே வீடு வாங்கி செட்டில் ஆகி உள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஜோதிகா தற்போது ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தலைகீழாக நின்றபடி நடிகை ஜோதிகா செய்யும் வொர்க் அவுட் வீடியோ பலரும் பார்த்து வியந்து வருகின்றனர். 44 வயதாகியும் ஜோதிகாவின் பிட்னஸ்க்கு இதுதான் காரணமா என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.