தமிழ் சின்னத்திரையை பொறுத்தவரை சீரியல், நடன நிகழ்ச்சி, பாட்டு மற்றும் நகைச்சுவை போன்ற போன்றவற்றின் பின்னணியில் அனைத்து சேனல்களும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தன. இந்நிலையில் தமிழக மக்களுக்கு புதியதாக ஒரு நிகழ்ச்சியைக் கொண்டு வந்தது விஜய் டிவி பிக் பாஸ். பிக் பாஸ் பலரின் பொழுதுபோக்குகளில் இந்த நிகழ்ச்சி பெரிதும் பங்கு கொண்டது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 1ல் உள்ள உலகநாயகன் தொகுத்து வழங்க 16 பிரபல நட்சத்திரங்கள் 100 நாட்கள் தனிமையில் வெளி உலக தொடர்பு இல்லாமல் ஒரே வீட்டில் வாழவேண்டும்.
பிக் பாஸ் சீசன் 1 இல் பங்குபெற்ற போட்டியாளர்களில் ஓவியாவுக்கு அடுத்த மிகவும் புகழ் அடைந்தவர் ஜூலி ஆரம்பத்தில் சாதாரண நடுத்தர குடும்பத்து பெண்ணாக மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று வந்த ஜூலி அதன் பிறகு தனது பொய்யான நடிப்பால் பலரின் வெறுப்பை பெற்றார்.
இந்த சீசன் முடிந்து எத்தனை வருடங்கள் ஆனபிறகும் ஜூலியின் மார்க்கெட் அதே நிலையில் உள்ளது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆன ஒரு பெண்மணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இவரது பிறந்தநாளுக்கு ரசிகன் ஒருவன் ஜூலியின் புகைப்படத்தை பூஜை ரூமில் வைத்து பூ பொட்டு போன்றவை வைத்து அவருக்கு பூஜை செய்துள்ளார். ஜூலியின் புகைப்படத்திற்கு பூ பொட்டு வைப்பதை பார்த்து பதற்றம் அடைந்தாலும், இந்த செய்தி பலரின் கோபத்தை தூண்டியுள்ளது.