நட்சத்திர தம்பதிகள் சூர்யா-ஜோதிகா, ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீஎண்ட்ரி கொடுத்தார்.
அதன் பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் பல பொது மேடைகளிலும் துணிந்து பேசி வருகிறார். சமீப காலமாக இவர் பேச்சு மிகவும் வைரலாகி வருகின்றது .
அண்மையில் இவர் தஞ்சை அரசு மருத்துவமனை பற்றி பேசியத்திற்கு ஆதரவாகவும், எதிர்க்கும் வகையில் கருத்துக்கள் சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் இது குறித்து ஜோதிகா தரப்பில் இருந்து ஏதும் விளக்கம் வரவில்லை.
தற்போது ஜோதிகா பேசிய தஞ்சை மருத்துவமனையை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார் தஞ்சை கலெக்டர் என செய்திகள் வெளிவந்துள்ளது.