நடிகை ஜோதிகா சமீபத்தில் அவர் ஒரு விருது வழங்கும் விழாவில் அவர் பேசிய பேச்சி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பேசியது தவறு என்றும், அவர் பேசியதில் என்ன தவறு என்றும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பரிமாறி வருகின்றனர் நெட்டிசன்கள்.
நடிகை ஜோதிகா பேசியது இது தான்” படக்குழுவினர் தஞ்சையில் ஷூட்டிங் நடத்தி வந்தனர். அப்பொழுது என்னிடம் தஞ்சை பெரிய கோவில் அருமையாக இருக்கும் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கனவே அந்த கோயிலை பார்த்துளேன். உதயப்பூரில் உள்ள அரண்மனை போல இருக்கும் நன்றாக பராமரித்து இருப்பார்கள். அதற்கு அடுத்த நாள் ஷூட்டிங் தஞ்சையில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்தது. அங்கு ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்த நான் அந்த மருத்துமனையில் மற்ற அறைகளை பார்த்தேன். அப்பொழுது எனது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதை என் வாயால் சொல்ல முடியாது என்று கூறியவர்.
ஒரு கோரிக்கை வைக்கிறேன் கோயிலுக்காக காசு கொடுக்கிறிங்க, அதனை வண்ணம் அடித்து பராமரிக்கிறீர்கள், உண்டியலில் காசு போடுறீங்க அந்த காசை கொஞ்சம் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு கொடுங்கள் என்றார். அந்த மருத்துவமனையின் நிலையை பார்த்ததும் நான் கோவிலுக்கு போகவில்லை என்றார்.
இந்த கருத்துக்கு ஜோதிகாவிற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தது. தற்பொழுது இந்த பேச்சுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கண்டனம் தெரிவித்து உள்ளார். நடிகை ஜோதிகாவின் கருத்து தவறானது மற்றும் கண்டிக்கத்தக்கது. அவரது குடும்பத்தினர் தொடர்ந்து இது போன்று பேசி வருகிறார்கள். இனிவரும் காலங்களில் ஹிந்து மதம் குறித்து இவ்வாறு பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் இவ்வாறு கூறியுள்ளார்.