ஐசரி கணேஷ் அவர்களின் மகள் திருமணம் சென்னையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்த திருமணவிழாவில் ரஜினிகாந்த் , கமல்ஹாசன், மணிரத்னம், ஷங்கர் என்று பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஆனால் எதிர்பாரா பெரிய ட்விஸ்ட் ஆக நடந்தது ஜெயம்ரவி பாடகி கெனிஷா இருவரும் ஜோடியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஜெயம் ரவிக்கு திருமணம் ஆகி இரு மகன்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் விவகாரத்திற்காக நீதிமன்றம் நாடி உள்ள ஜெயம்ரவி விவாகரத்து கிடைப்பதற்கு முன்னே ஜோடியாக தனது நெருங்கிய தோழி என கூறப்பட்டு வந்த பாடாகி கெனிஷாவுடன் திருமணத்திற்கு எதோ புதிதாக திருமணம் ஆனது போல ஜோடியாக வந்தது அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது
ஜோடியாக போஸ் கொடுத்த ஜெயம் ரவி டென்ஷன் ஆன மனைவி உடனே அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.


இந்த அறிக்கைக்கு பதிலாக கெனிஷா “வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவுகள் கொண்டவர்களுக்கு இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளது. ஒன்று ஆதரவான துணை இருக்க வேண்டும். இல்லையெனில் துணையே இல்லாமல் வாழ்க்கையை நடத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

ஜெயம்ரவிக்கு ஆதரவாகவும் அவரது மனைவி ஆர்த்திக்கு ஆதரவாகவும் சமூகவலைத்தளத்தில் தங்களது கருத்தினை பதிவு செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.