ஜெயம் ரவி விவாகரத்து பிரச்சனை தான் ஹாட் டாபிக். ஜெயம் ரவி சரி இல்லை என்று அவரது மனைவி அறிக்கை கொடுக்க பதிலுக்கு ஜெயம் ரவி மனைவி மற்றும் மாமியார் சரி இல்லை என்று அறிக்கை கொடுத்து இருந்தார்.
அதற்கு பதில் கொடுக்கும் விதமாக தற்பொழுது ஜெயம் ரவி மாமியார் சுஜாதா விஜயகுமார் அவர்கள் ஜெயம் ரவி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் நான் 25 வருடங்களாக திரைத்துறையில் தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். சுந்தர் சி அவர்களை வைத்து வீராப்பு என்ற படத்தை எடுத்தேன். அதன் பின் சின்னத்திரையில் தயாரிப்பில் இருந்தேன். என் மாப்பிள்ளை ஜெயம் ரவி அவர்கள் தான் நீங்கள் சினிமாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறினார்.
என் மாப்பிள்ளை ஜெயம் ரவியை வைத்து அடங்காமாறு படத்தை எடுத்தேன் விமர்சனம் ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றி படமாக அமையவில்லை.
அடங்காமாறு, பூமி மற்றும் சைரன் படங்களை தயாரித்தேன் இதற்காக 100 கோடி ரூபாய் பைனான்சியரிடம் கடன் வாங்கினேன், அதில் 25 % ஜெயம் ரவிக்கு ஊதியமாக கொடுத்துவிட்டேன். வட்டியை நானே கட்டி வருகிறேன்.
அவர் என் மாப்பிள்ளை என்பதை தண்டி அவரை என் பிள்ளையாக நினைக்கிறேன். இன்னும் ஜெயம் ரவியை என் மகனாக நினைக்கிறேன். உங்கள் பொய் அறிக்கை வேண்டாம்.
இன்று வரை என் பேர குழந்தைகள் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன். மகளை வாழாவெட்டி ஆக பார்க்கும் நிலைமை எந்த தாய்க்கும் வரக்கூடாது என்று வருத்தமான பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார்.