நடிகை காம்னா தமிழில் “இதய திருடன்” என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்து வந்தார். அதிலும் நடிகர் ஜீவனுடன் “மச்சக்காரன்” என்று படத்தில் நடித்தார். ராகவா லாரன்ஸ் ஹீரோவா நடித்த “ராஜாதி ராஜா” என்ற படத்தில் கிளாமர் கலந்த வேடத்தில் நடித்து இருந்தார்.
“காசேதான் கடவுளடா” என்ற படத்திற்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த காம்னா. 2014 ஆம் ஆண்டு ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். காம்னாவிற்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்த வயதிலும் தனது இளமை மாறாமல் கட்டுக்கோப்பாக உடலை வைத்து கொள்ள தினமும் கடுமையான உடற்பயிற்சி செய்து வருகிறார் காம்னா. அதிக இடை கொண்ட பந்தை வைத்து கொண்டு காம்னா செய்கின்ற ஒர்கவுட் வீடியோ தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ