ஜெயம் ரவி ஜெயம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்து தொடர்ந்து சில நல்ல படங்களில் நடித்து வெற்றி பெற்ற ஹீரோ. சில நாட்களாகவே ரவி பற்றி செய்திகள் அடிக்கடி வருவதை நாம் காண்கிறோம்.

ரவி ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இரு மகன்கள் உள்ளனர். ரவியின் மாமியார் தான் ரவியை வைத்து சில படங்கள் தயாரித்தாக தகவல். கடந்த ஒரு சில வருடங்களாக ரவி குடும்பத்தினருக்கும் ஆர்த்தி குடும்பத்தினருக்கும் சண்டை முற்றி போக கடைசியில் ரவி எடுத்த முடிவு தான் விவாகரத்து.

நீதிமன்றத்தில் ரவி விவாகரத்து கேட்டு இருக்கும் இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐசரி கணேஷ் அவர்களின் மகள் திருமணத்திற்கு ரவி அவரது புது GIRL FRIEND கெனிஷா உடன் ஜோடியாக வந்து இருந்தார். கெனீஷாவை முதலில் நல்ல நண்பர் என்ற ரவி தற்பொழுது அவரை காதலித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க இவர்கள் ஐசரி கணேஷ் அவர்களின் இல்ல திருமண விழாவில் ஜோடியாக வந்ததை பார்த்த ரவியின் மனைவி ஆர்த்தி கொதித்து போய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிள்ளைகளின் எதிர்காலம் என்ன ஆகும் இப்படி செய்வது சரியா உங்களை சும்மா விடமாட்டேன் என்று வருத்தத்துடன் பதிவிட்டு இருந்தார் ஆர்த்தி.
அந்த அறிக்கைக்கு தற்பொழுது ரவி மோகன் பதில் நான்கு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார் அதில் இத்தனை வருடமாக முதுகில் குத்தினார்கள் இப்போது நெஞ்சில் குத்தியது சந்தோசமாக இருக்கிறது. நான் எனது முன்னாள் மனைவியைத் தான் பிரிந்தேன் என் குழந்தைகளைவிட்டு அல்ல. என் மகிழ்ச்சியும் பெருமையும் அவர்கள் தான். என் இரண்டு மகன்களுக்கு நான் சிறப்பானதைச் செய்வேன்.

ஒரு கணவராக கூட என்னை மதிக்கவில்லை. கடந்த 5 வருடங்களாக என்னுடைய பெற்றோருக்கு ஒரு பைசா கூட பணம் கொடுக்காமல் தடுத்து வந்தனர். என் மனைவி காதல் என்ற பெயரில் என்னை பொன் முட்டை போடும் வாத்தாக பயன்படுத்தினார்கள்.என்னுடைய மாமியாரின் பல கோடி ரூபாய் கடனுக்கு என்னை ஜாமீன் கையெழுத்து போட வைத்தார்கள். என் மனைவியின் ஆடம்பர செலவே என்னுடைய கடனுக்கு காரணம்.
வீட்டைவிட்டு நான் வெளியேறியபோது தோழியாக அறிமுகவமானவர் கெனீஷா என் வாழ்வின் அழகான துணை. நான் கண்ணீர், ரத்தம் என துடித்துக்கொண்டிருந்தபோது என்னை துன்பங்களில் இருந்து வெளியே கொண்டு வந்தவர் கெனிஷா. எந்த ஆதரவும் இன்றி வீட்டை விட்டு வெளியே வந்த போது அவர்தான் என் வாழ்க்கையில் ஒளியை கொண்டு வந்தவர். கெனிஷாவை அவமதிக்கும் எந்த செயலையும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று ரவி மோகன் அந்த பதிவில் கூறி இருக்கிறார்.
ஒரு கதைக்கு எப்போதும் இரண்டு பக்கம் இருக்கும். மறுபக்கம் இப்போது வெளிச்சத்திற்கு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ரவி மோகன் பதிவிட்டு உள்ளார்.