” புரட்சித் தலைவரின் “
மெகா ஹிட் …. திரைப்படங்களில் … ஒன்றான …
” ரகசிய போலீஸ் 115 “
திரைப்பட …. படப்பிடிப்பு
தளத்தில் …. வைத்துதான் ….
அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த
புரட்சித் தலைவியை …
முதன் முதலில் … நான்
பார்க்கிறேன்.
#
” அடிமைப்பெண் ” …
திரைப்பட … வேலைகளில் … தலைவர் படு பிஸியாக
இருந்த … போது …
எனது … அண்ணன்தான் …
பல்லாவரம் …
” எம்ஜிஆர் ” – ரசிகர்மன்றத் தலைவர்.
அவர் பெயர்….
சேர்மன்.துரை …!
அவரோடு சென்று …
தலைவரை … படப்பிடிப்பு … தளங்களில் … பார்க்க …
செல்லும் … போது …!
புரட்சித் தலைவி அம்மாவை ….
பார்த்திருக்கிறேன் ..!
#
1981 – ல் …. அம்மா …
அவர்களின் … அறிமுகம் எனக்கு கிடைத்தது.
அப்போது …. கட்சியில்
பெரிய … பெரிய …
தலைவர்கள் … மந்திரிகள் … எல்லாம்
இருந்தார்கள்.
நடமாடும் பல்கலைக்கழகம் …
திரு.நெடுஞ்செழியன்.
திரு.கே.ஏ.கே.
திரு.ஆர்.எம்.வீ.
திரு.முசிறிப்புத்தன்.
திரு.ராகவானந்தம்.
உட்பட … பல்வேறு …
பெரியவர்கள் …. இருந்தார்கள்.
#
மதிப்பிற்குரிய. ஐயா.முசிறிப்பித்தன் …
அவர்களோடு நான் பயணப்படுகையில் …
பல நிகழ்ச்சிகளில் …
மாண்புமிகு.அம்மாவை
சந்தித்து இருக்கிறேன்.
#
பின்பு …. அம்மா அவர்கள் … கட்சியின் …
கொள்கை பரப்பு செயலாளராக இருந்த … காலத்தில் …
அவர்களின் … பயணத்திற்கு உதவியாக … கூடவே …
பயணம் செய்யும்படி …
புரட்சித்தலைவர் …
என்னை இருக்கவைத்தார்.
#
பல … கூட்டங்களுக்கு …
அம்மா … அவர்களோடு
பயணப்பட்டேன். கூட்டத்தில் … பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக
செய்வதை பாராட்டுவார்கள்.
#
திரைப்படத்துறையில்
சிறந்த
Stund Master க்கான …
தங்க மெடலை … தமிழக அரசு … சார்பில்
ஐந்து முறை …
பெற்றுள்ளேன்.
( மாண்புமிகு.அம்மா …
அவர்களின் …. வெற்றித் திருக்கரங்களால் மட்டும் … இரண்டு … )
#
மாண்புமிகு.அம்மா …
அவர்களோடு … மூன்று
பொதுத் தேர்தல்களில்
பணியாற்றும் வாய்ப்பு
கிடைத்ததை … பெரும்
பாக்யமாக … நினைக்கிறேன்.
#
இந்திய … திரைப்பட … உலகில்
லேடி.சூப்பர் ஸ்டாராக … ஆக …
இருந்த … விஜயசாந்தி
அவர்களுடன் சேர்ந்து
மாண்புமிகு.அம்மா …
அவர்களை பலமுறை
சந்தித்தது .. பேசியதெல்லாம் … என்றும் … மறக்க …
முடியாத … நிகழ்வு…!
#
ஒருமுறை …
சென்னையில் … நடந்த
ஒரு … கூட்டத்தில் …
அம்மா அவர்களுக்கு …
யார் … யார் … எல்லாம்
மலர்க் கொத்து …
கொடுக்க வேண்டும்
என்று அதிகாரிகள் …
பெயர் எழுதி … கொடுத்தனர் … எல்லோரும் பெரிய …
பெரிய VIP’s தான் …!
எனது … பெயரும் எழுதப்பட்டது .
#
மிகப் பெரும் கூட்டம் …
சரி … வேண்டாம் … அம்மா அவர்களை பார்த்ததே ….
போதும் என்று நினைத்துவிட்டு நான்
கிளம்பிவிட்டேன் …!
#
வெளியே வருகிறேன்
எனது பின்னாலேயே …
போலீஸ் … ஓருவர் … என்னை அழைத்தபடி …
ஓடி வருகிறார்.
நான் … திரும்பி பார்த்ததும் … சார் …
C.M.க்கு … மலர்க்கொத்து …
கொடுப்பவர்கள் …
பட்டியலில் … உங்க …
பெயர்தான் … ” டிக் ” …
ஆகி இருக்கிறது …!
“வாங்க ” … என்று …
அழைத்ததும் … அம்மாவின் … பெரிய …
மனதை … நினைத்து…
ஓடினேன்.
எனது … பெயர் வாசிக்கப்படும் … போது நான் …
கூட்டத்தில் … சிக்கிக் …
கொண்டேன் …!
மேடையில் அம்மா …
நிற்கிறார்கள் …!
ஒரு விநாடிதான் …
யோசித்தேன்.
#
சடாரென … தடுப்புக் …
கட்டைகளின் … குறுக்கே … தாண்டிச்சென்று …
” ஜம்ப் ” – செய்து குதித்து … ஓடினேன் …
அதுவரை … மாண்புமிகு.அம்மா …
அவர்கள் … நான் ஓடி …
வருவதைப் பார்த்து …
சிரித்தபடியே … நின்று
கொண்டிருந்தார்கள்.
நேரம் தவறாமையும் …
ஒழுக்கமும் … எப்போதும் … சிறப்பாக
இருக்க வேண்டும் …
என்பதில் … மிகவும் …
கவனமாக … இருப்பார்கள் … என்பது
பல கூட்டங்களுக்கு …
நான் … அம்மா …
அவர்களோடு …
பயணப்பட்டதில் எனக்கு
தெரியும் … என்பதால்
அப்படி … ஓடினேன்.
மேடையில் ஏறினேன்..!
#
” அம்மாவிடம் ” …
பூங்கொத்தை … கொடுத்துவிட்ட பிறகுதான் … எனக்கு …
சுவாசமே …. சீரானது.
அதைப் பெற்றுக் கொண்ட … அம்மா …
ஏன் … இப்படி …?
பார்த்து … வரவேண்டாமா …?
என்று … அன்போடு …
கடிந்து … கொண்டார்கள்.
#
அதன் … பிறகு …
கீழே … வந்த பிறகுதான்
தெரிந்தது.
சுமார் …. பதினைந்து ….
நிமிடங்களாக …
ஏழைகளின் …
இதய தெய்வம் …
அவர்களோடு … நான் …
பேசிக் கொண்டு …
இருந்திருக்கிறேன் …
என்பது.
#
மாண்புமிகு. அம்மா …
அவர்களின் … நினைவாற்றல் … கண்டு … பிரமித்துப் …
போனேன் … என்றால்
அது … மிகையாகாது.
#
” இந்தச் சூழலில்தான்
புரட்சித் தலைவி ….
மாண்புமிகு. அம்மா …
அவர்களைக் …. காணச் சென்ற … என்னை …
அழைத்து …
தனிப்பட்ட … முறையில்
எனக்கு … நினைவுப் …
பரிசு … வழங்கினார்கள்.
#
அதுதான் … இந்த …
” தங்க யானை …”
அதோடு … ஒரு …
பாராட்டுக் கடிதமும் …
இருந்தது.
” 1994 ” – ஆம் … ஆண்டு …
அம்மா … அவர்கள் …
கொடுத்த … பரிசு …
இன்னும் … கூட …
( கிட்டத்தட்ட … 25 – ஆண்டுகள் … கடந்த பின்னும் … )
எனது …. இல்லத்தை …
அலங்கரிப்பதோடு …
அம்மா அவர்களின் …
அன்பையும் … நினைவு
படுத்துகிறது.
#
எனது … ஞாபகக் குகைக்குள் … இன்னும்
தங்கத்தாரகை …
மாண்புமிகு . அம்மா …
அவர்கள் …
” சிம்மாசனம் ” …
இட்டு … அமர்ந்திருக்கிறார்கள்.
#
” பிரமாண்டம் “
” ஆச்சரியம் “
” பலம் “
” அன்பு “
” நம்பிக்கை “
இதெல்லாம் …
” யானை” … யின் …
அடையாளமாகக் …
கொண்டால் … அதுதான் … ” அம்மா “
#
நன்றி.
#
அன்புடன் ….
ஜாகுவார்.தங்கம்.
தலைவர்
கில்டு – சங்கம்.
சென்னை.