Tuesday, November 5, 2024
-- Advertisement--

JAILER FIRST REVIEW: ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு நாசுக்காக அனிருந் சொன்ன விஷயம்…!!! அப்போ ஜெயிலர் …..?

சூப்பர் ஸ்டார் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர் ஏற்கனவே நெல்சன் விஜயை வைத்து எடுத்த பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

நெல்சன் படத்தில் நடிக்காதீர்கள் ரஜினிக்கு வந்த அழைப்பு ?

பீஸ்ட் படத்தின் விமர்சனத்தால் நெல்சன் ரஜினி படத்தை இயக்க வேண்டுமா தயவு செய்து இயக்குனரை மாற்றுங்கள் என்று பல தரப்பில் இருந்து ரஜினிக்கு அழைப்பு வர ரஜினி பீஸ்ட் திரைப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் டீமை அழைத்து கேட்டார்.

பீஸ்ட் படத்தின் ரிசல்ட்டை கேட்டறிந்த ரஜினி:

பீஸ்ட் படத்தின் நிலவரம் பற்றி கேட்க பீஸ்ட் திரைப்படத்தின் விமர்சனம் சுமாராக தான் உள்ளது ஆனால் படத்தின் வசூல் பெரிய லாபத்தை கொடுத்துள்ளது அது மட்டுமல்லாமல் வாங்கிய டிஸ்ட்ரிபியூட்டர் தியேட்டர் ஓனர் அனைவரும் ஹேப்பி என்று கூறிவிட்டு நெல்சனுடன் தாராளமாக படம் பண்ணலாம் என்று சன் பிக்சர்ஸ் கூறிய பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நெல்சன் மீது உள்ள அபார நம்பிக்கையில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

தூங்காமல் வேலை பார்த்த நெல்சன்:

ஜெயிலர் திரைப்படத்திற்காக இயக்குனர் நெல்சன் தூங்காமல் உழைக்கிறார் ரஜினியே நெல்சனை கூப்பிட்டு தூங்குமாறு அட்வைஸ் கொடுத்ததாகவும் செய்திகள் ஒரு பக்கம் வந்து கொண்டிருந்தது. எப்படியாவது இந்த படத்தை ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவும் பகலமாக நெல்சன் உழைத்துக் கொண்டு இருக்கிறார் என்ற செய்தியும் இணையத்தில் உலா வந்து கொண்டிருந்தது.

ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு அனிருத் சொன்ன விஷயம்:

கிட்டத்தட்ட இன்னும் சில தினங்களில் ஜெயிலர் திரைப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்த இண்டஸ்ட்ரியில் உள்ள ஒரு சிலர் படம் நிச்சயம் வெற்றி பெறும் நெல்சன் கம்பேக் மூவியாக இருக்கும் என்று கூறிவந்த நிலையில் இன்று அனிருத் ஜெயிலர் வின்னர் என்பதை நாசுக்காக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Jailer Movie First Review: இசையமைப்பாளர் என்பதால் முழு படத்தையும் பல தடவை அனிருத் பார்த்திருப்பதால் படம் எப்படி வந்திருக்கும் என்பது நிச்சயம் அனிருத்துக்கு தெரிந்திருக்கும் அனிருத் படத்தை முழுதாக பார்த்துவிட்டு தான் இதை கூறியுள்ளார் என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

எது எப்படியோ சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கும் இப்பொழுது ஒரு பெரிய ஹிட் தேவைப்படுகிறது நெல்சனுக்கு இந்த திரைப்படம் கம்பேக் மூவியாக அமையட்டும்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles