Tuesday, September 8, 2026
-- Advertisement--

திரையரங்குகளுக்கு ஜாக்பாட்.. 5 காட்சிகள் உத்தரவால் உருவாகும் பெரிய லாபம்!

சினிமா ரசிகர்கள் படிப்படியாக திரையரங்குகளில் இருந்து ஓடிடி தளங்களுக்கு மாறி வரும் கால கட்டம் இது. முன்பை போல தியேட்டர்களுக்கு சென்று ஒரு படத்தை கண்டு ரசிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த சூழலில் முதலமைச்சர் விஜய்யின் ஒரு உத்தரவு தியேட்டர் உரிமையாளர்களுக்கு மீண்டும் ஒரு நம்பிக்கையை தந்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாள்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளித்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

முதல் ஏழு நாட்களில் கிடைக்கும் கலெக்ஷனில் தான் அந்த திரைப்பட தயாரிப்பாளர் பெரும்பாலான பங்கினை பெறுகிறார் மேலும் இந்த முதல் ஏழு நாளில் அந்த திரைப்படத்திற்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பை பொறுத்துதான் அந்த படத்திற்கான ஓடிடி வெளியிட்டு உரிமம் ,இசையுரிமை மற்றும் சாட்டிலைட் உரிமங்களுக்கான கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

அந்த வகையில் இந்த முதல் ஏழு நாட்கள் கூடுதலாக ஒரு காட்சி எனும் போது படத்தின் வசூல் அளவு அதிகரிக்கும் இது படத்திற்கான மற்ற வெளியீட்டு உரிமங்களின் கட்டணத்தை உயர்த்தும். அந்த வகையில் தயாரிப்பாளர் தரப்புக்கு இது மிகச் சிறந்த லாபத்தை தரும். இந்த அறிவிப்பின் மூலம் ஒரே திரை வைத்திருக்கக்கூடிய சிறு சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் செயல்படக்கூடிய திரையரங்குகள் நிச்சயம் பலன் பெறும்.

ஏனெனில் நகரப்புறங்களில் இருக்கக்கூடிய திரையரங்குகளை விட இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருக்கக்கூடிய ஒரே ஸ்கிரீன் கொண்ட திரையரங்குகள் தான் அண்மைக்காலமாக செயல்பட முடியாமல் திணறுகின்றன.கூடுதலாக ஒரு ஷோ என்பது இவர்களுக்கு மக்கள் வருகையை அதிகரிக்கும் சற்றே வருமானத்தையும் பெருக்கும்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles