வழக்கமாக இடைத்தேர்தல் அல்லது தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது மக்களுக்கு இலவசமாக பல பொருட்கள் தருவது வழக்கம். உதாரணத்திற்கு வேட்டி சேலை தருவது வழக்கம். ஆனால் வருகிற 27ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் பணம் சரமாரியாக கைமாற்றப்படுகிறது என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் ஒரு சில கட்சிகள் தினமும் 500 ரூபாய்க்கு பிரியாணி மட்டுமல்லாது மது பாட்டில்களையும் வழங்குவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் இளம் தலை முறையினரை கவருவதற்கு வெறும் பணம் மட்டும் கொடுத்தால் பத்தாது என்பதற்காக புதிய முறையை மேற்கொண்டு உள்ளது கட்சிகள். அது என்னவென்றால் இந்த தேர்தலுக்காக மட்டும் ஒரு கட்சி 150 கோடி வரை செலவு செய்துள்ளது. இன்னும் அதிகமாக செலவு செய்யவும் வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.
மேலும் அனைத்து இளைஞர்களுக்கும் 8000 மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்சை பரிசாக தருவதாகவும் உறுதிமொழி அளித்துள்ளது எனவும் கூறப்படுகிறது இப்படியே போனால் இந்த நாடு தாங்காது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.