Wednesday, July 17, 2024
-- Advertisement--

கல்யாணம் பண்ணாமலே பாவனி கர்ப்பமா..? அமீர் கூறும் அதிர்ச்சியான பதில் …

சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வந்தவர் பாவனி. இவர் ஏற்கனவே தெலுங்கு சீரியலில் பிரபலமான நடிகை, தெலுங்கு சீரியல் நடிகரோடு ஏற்பட்ட காதலால் பாவனிக்கு திருமணம் நடந்தது.

திருமணமான ஓரிரு வருடங்களிலேயே பாவனியின் முன்னாள் கணவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு பாவனி தனியாக வாழ்க்கையை ஓட்டி வந்தார். தமிழில் சின்னதம்பி சீரியலில் நடித்து வந்த பாவனி நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக்பாஸில் என்ட்ரி கொடுத்தார்.

அதில் வைல்ட் கார்டு போட்டியாளராக சேர்ந்தவர் நடன கலைஞர் அமீர். அமீர் பாவனியை பார்த்ததில் இருந்தே காதலில் விழுந்தார். பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு இருவரும் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அதில் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் காதல் ஏற்பட்டு இருவரும் தற்போது ஜோடியாக தான் எங்கு சென்றாலும் செல்கிறார்கள்.

இருவருக்கும் பட வாய்ப்பு வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் பாவனி மற்றும் அமீர் திருமணம் பற்றி கூறுகையில் தற்பொழுது நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறி உள்ளோம். திருமணத்தைப் பற்றி இருவருமே யோசிக்கவில்லை. நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணம் மட்டுமே இருவருக்கும் உள்ளது.

இந்நிலையில் அமீர் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெறும் பொழுது அதில் உள்ள ஃபார்மைபூர்த்தி செய்யும் போது பாவனி நீங்கள் மாசமாக உள்ளீர்களா? என்று கேட்டுள்ளார்கள் அமீர். என்ன பதில் அளிப்பது என்று கேக்க.., அமீர் ஆம் என்று பதில் சொல்லியுள்ளார். என்ன அமீர் இப்படி பதில் சொல்கிறாய் என்று கேட்டதற்கு இல்லை இல்லை கூடிய விரைவில் நான் கர்ப்பமாக இருப்பேன் என்று பதில் காமெடியாக கூறியுள்ளார்.

இது குறித்து ரசிகர்கள் நீங்கள் திருமணம் ஆகி கர்ப்பமாக உள்ளது ஒன்றும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமில்லை நீங்கள் இது எதார்த்தமான ஒன்றுதான் என்று ரசிகர்கள் கருத்து கூறி சொன்னார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles