ஊரடங்கு காரணமாக லண்டனில் உள்ளார் பிரபல நடிகர் இப்ரான் கான். இவர் பிரபல ஹிந்தி நடிகர் ஆவார். இவர் நிறைய ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் புற்றுநோய் ஏற்பட்டதை அடுத்து அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகும் இவர் படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். இவர் சமீபத்தில் நடித்த படம் ஆங்க்ரேஸி மீடியம். இந்த படம் நன்றாக ஓடி கொண்டிருந்த போது தான் ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இந்நிலையில் லண்டன் சென்றிருந்த அவர் ஊரடங்கு காரணமாக அங்கேயே சிக்கி கொண்டார். இந்நிலையில் இவரது அம்மா சயீதா பேகம் கடந்த சில மாதமாக உடல் நிலை சரி இல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் காலமானார். தன் தாய்க்கு இறுதி சடங்கு செய்வதை நேரில் காண முடியாமல் வீடியோ மூலம் பார்த்துள்ளார் இர்பான்.