Thursday, September 10, 2026
-- Advertisement--

தண்ணீரால் இயங்கும் சூப்பர் ரயில்.. நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த சென்னை ICF

இந்திய ரயில்வேயை அடுத்த லெவலுக்கு கொண்டு போக மத்திய அரசு இப்போ சூப்பரான ஒரு பிளானை கையில் எடுத்துள்ளது.. அதன்படி, புகையே வராமல் வெறும் தண்ணீரை மட்டும் ஆவியாக வெளியிடும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில், சென்னை ஐசிஎப் தொழிற்சாலையிலேயே தயாரித்து இப்போது தயாராகிவிட்டதாம்..

மத்திய அரசு இந்திய ரயில்வே துறையை நவீனமயமாக்கும் முயற்சியில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதிலும் இன்றைய பயணிகளின் தேவைகளை நிறைவேற்றுவது, எரிபொருள் செலவைக் குறைப்பது மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்துவது போன்றவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன

அந்த வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் மற்றும் பாரத் ரயில்கள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த அதிநவீன ரயில்களின் வரிசையில், இப்போது சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கார்பன் உமிழ்வை முற்றிலும் குறைக்கும் நோக்கில் “ஹைட்ரஜன் ரயில்” என்ற புதிய புரட்சிகரமான திட்டத்தை மத்திய ரயில்வே வாரியம் கையில் எடுத்துள்ளது.

மொத்தம் 10 பெட்டிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலின் எஞ்சின் சோதனை ஓட்டம் சமீபத்தில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles