Thursday, September 10, 2026
-- Advertisement--

இந்திய வீராங்கனை ஞானேஸ்வரி சாதனை.. பளுதூக்குதலில் இரட்டை பதக்கம்!

அகமதாபாத்தில் உள்ள காந்தி நகரில் ஆசிய சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ஞானேஸ்வரி யாதவ் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஸ்னாட்ச் பிரிவில் 88 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி, ஸ்னாட்ச் மற்றும் கிளீன் & ஜெர்க் இரண்டையும் சேர்த்து மொத்தம் 194 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

சீன வீராங்கனையான ஜின்லான் ஜாவோ 216 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கமும், வியட்நாமை சேர்ந்த ஹோய் ஹுவாங் நுயென் 195 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles