Sunday, September 6, 2026
-- Advertisement--

பேட்டிங்கில் பட்டையை கிளப்பிய ஸ்மிருதி – ஷபாலி.. W T20 உலகக்கோப்பையில் இந்தியா வெற்றி

12 அணிகள் பங்கேற்கும் 10ஆவது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் ஜூன் 12ஆம் தேதி தொடங்கியது. இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடர் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குருப் ஏவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளும்,

குரூப் பி-வில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. முன்னதாக, பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது. இந்தியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.

இதில் முதலில் பேட் செய்த இந்தியா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 74 ரன்களும், ஷபாலி வர்மா 56 ரன்களும் எடுத்தனர். பின்னர், 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நெதர்லாந்து அணி 17.3 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles