Saturday, August 15, 2026
-- Advertisement--

“அரசின் மிகப்பெரிய களப்பணி இன்று தொடக்கம்… மக்கள் தொகை கணக்கெடுப்பில் உங்கள் வீட்டுக்கும் வருகிறார்கள்!”

16 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்ட கணக்கெடுப்பு பணியாளர்கள் வீடு தோறும் சென்று குடும்ப விவரங்கள், வசிப்பிடம் மற்றும் அடிப்படை தகவல்களை பதிவு செய்ய உள்ளனர்.

இந்த கணக்கெடுப்பின் மூலம் மாநிலத்தின் தற்போதைய மக்கள் தொகை, குடும்ப அமைப்பு, குடியிருப்பு நிலை, சமூக மற்றும் பொருளாதார விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இத்தகவல்கள் எதிர்கால அரசுத் திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சரியான தகவல்களை வழங்கி அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சேகரிக்கப்படும் தகவல்கள் சட்டப்படி பாதுகாக்கப்படும் என்றும், அவை கணக்கெடுப்பு நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, மாநிலத்தின் சமீபத்திய மக்கள்தொகை நிலவரத்தை துல்லியமாக அறிய உதவும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதன் முடிவுகள் எதிர்கால கொள்கை முடிவுகள் மற்றும் வள ஒதுக்கீட்டில் முக்கிய ஆதாரமாக அமையும்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles