சர்வதேச டி 20 அணிகள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் 3 முறை சாம்பியனான இந்திய அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்திருந்தது.மூன்றாவது முறையாகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்தது. நடப்பு சாம்பியனான இந்திய அணி 275 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது.
இங்கிலாந்து அணி 262 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 258 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன. நியூஸிலாந்து (247), தென் ஆப்பிரிக்கா (244), பாகிஸ்தான் (240), மேற்கு இந்தியத் தீவுகள் (233), வங்கதேசம் (225), இலங்கை (221), ஆப்கானிஸ்தான் (220) ஆகிய அணிகள் முறையே 4 முதல் 10-வது இடங்களில் உள்ளன.










