Friday, August 14, 2026
-- Advertisement--

டி20 தோல்விக்கு தக்க பதிலடி… இங்கிலாந்தை சாய்த்த இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஏற்பட்ட ஏமாற்றத்தை பின்னுக்குத் தள்ளிய இந்திய அணி, முதல் ஒருநாள் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றாலும், இந்திய பந்துவீச்சாளர்கள் நடுப்பகுதியில் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். அக்‌ஷர் படேல் துல்லியமான பந்துவீச்சால் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்ற, இங்கிலாந்து அணி 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் மற்றும் லியம் டாசன் மட்டுமே அணியை ஓரளவு மீட்டனர்.

259 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் சுப்மன் கில் நிதானமான தொடக்கத்தை அமைத்தார். அவர் 80 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார். பின்னர் அக்‌ஷர் படேல் அரைசதம் விளாச, வாஷிங்டன் சுந்தர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை உறுதி செய்தார். இந்தியா 4.4 ஓவர்கள் மீதமிருக்கும்போதே இலக்கை எட்டியது.

டி20 தொடரில் 4-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு இந்த வெற்றி மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. பேட்டிங், பந்துவீச்சு என இரு துறைகளிலும் சமநிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா, ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கி இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles