சின்னத்திரையில் தொகுப்பாளர்கள் பிரபலமாவது மிகவும் கடினம். அந்த வகையில் தன்னை தொகுப்பாளராக நிலைநிறுத்திக் கொண்டவர் இமான் அண்ணாச்சி. நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் தன்னுடைய பேச்சுத் திறமை காரணமாக தொகுப்பாளராக முதல் முதலில் மக்கள் டிவியில் பணியாற்றினார். அதன்பிறகு சுட்டி டிவி, சன் டிவி என பல சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார் . சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டி சுட்டிஸ் போன்ற இவரது நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலம்.
அந்த பிரபலத்தை பயன்படுத்தி இவருக்கு பல சினிமா வாய்ப்புகள் வந்தன. நீர்ப்பறவை, மரியான், நய்யாண்டி, வேட்டைக்காரன், கயல், அங்காடி தெரு, ஒரு மோதல் ஒரு காதல், என்ன சத்தம் இந்த நேரம், பட்டைய கிளப்பணும் பாண்டியா, பூஜை, காக்கிசட்டை, கதகளி, சிங்கம்3 என இவருக்கு எக்கச்சக்க படங்கள் வந்து கொண்டே இருந்தன. இவரும் முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வந்தார்.
இந்நிலையில் இளம் வயதில் எவ்வாறு இருந்தார் என்று புகைப்படம் நம் 24x 7 இணைய பக்கத்திற்கு கிடைத்துள்ளது. இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது இமான் அண்ணாச்சி ராஜ்கிரன் போலவும் விஜயகாந்த் போலவும் உள்ளார் என ரசிகர்கள் கருத்து கூறுகின்றனர். இதோ அந்த புகைப்படம்.