தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி நிலவி வரும் இந்த நேரத்தில் தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவை கிண்டல் செய்து பிரபல நடிகை மாளவிகா மோகன் பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
பிரபல நடிகை ஒருவர் ஹாஸ்பிடல் சம்பந்தப்பட்ட காட்சியில் மேக்கப்புடன் நடித்துள்ளார் என்று கிண்டலாக கூறினார் அதனை நோட் செய்த நயன்தாரா கனெக்ட் படத்தின் ப்ரோமோஷனில் மாளவிகாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனரின் விருப்பத்தினால் மட்டுமே அந்த காட்சியில் அப்படி நான் நடித்தேன் அது கமர்சியல் படம் அந்த படத்தில் தலையை விரித்து போட்டு எல்லாம் நடிக்க முடியாது என்று பதிலடி கொடுத்தார்.
மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட என்ற திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார் அடுத்த படமே தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து தனுஷின் மாறன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் தற்பொழுது ஹிந்தி படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகைகளை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை ஹிந்தியில் கத்ரீனா, தீபிகா படுகோன், அலியா பட் போன்ற பிரபல நடிகைகளை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில்லை அவர்களை சூப்பர் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள் ஆனால் சமீபகாலமாக நடிகைகளை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது எனக்கு பிடிக்கவில்லை என்று ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
மாளவிகா மோகனின் இந்த பதில் மீண்டும் நயன்தாராவை தாக்கியது போல இருந்தது நயன்தாரா அவர்களை தமிழ்நாட்டின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வரும் இந்நிலையில் மாளவிகாவின் இந்த கருத்து சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
மாளவிகாவே என்ன நடந்தது என்பதை கூறியுள்ளார் சமீபத்தில் ட்விட்டரில் எனது கருத்து பெண் நடிகர்களை குறித்து பயன்படுத்தும் ஒரு சொல்லைப் பற்றியது. எந்த குறிப்பிட்ட நடிகை பற்றியும் நான் கூறவில்லை. நயன்தாராவை மிகவும் மதிக்கிறேன், பாராட்டுகிறேன் மேலும் ஒரு மூத்தவளாக அவரது நம்ப முடியாத பயணத்தை நான் பார்க்கிறேன் தயவு செய்து மக்கள் அமைதியாக இருக்க முடியுமா என்று கூறி உள்ளார்.