சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் இருந்து ஷாருக்கான் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக டான்ஸுக்கு பெயர் போன ரித்திக் ரோஷனை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் பட்டையை கிளப்பிய பிறகு அதன் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்கள். ஜெயிலரை போன்றே அதன் இரண்டாம் பாகத்திலும் பிரபல நட்சத்திரங்கள் கவுரவத் தோற்றத்தில் வருகிறார்கள்.
இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினியின் தீவிர ரசிகன் என்று அடிக்கடி சொல்லி வரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை கவுரவத் தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்கள்.
தலைவர் படத்தில் நடிக்க கசக்கவா செய்யும் என்று சம்மதம் தெரிவித்தார் ஷாருக்கான். ஆனால் ஜெயிலர் 2 ஷூட்டிங்கிற்கு முன்பு ஷாருக்கானின் கிங் பட வேலை துவங்கிவிட்டது.
ஜெயிலர் 2 படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். இரண்டாவது முறையாக ரஜினியுடன் சேர்ந்து படம் பண்ணயிருக்கிறார் நெல்சன் திலீப்குமார். இதையடுத்து மூன்றாவது முறையாகவும் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது.










