Saturday, April 20, 2024
-- Advertisement--

நாடித்துடிப்பு என்பது என்ன? அதைத் தெரிந்து கொள்ள மணிக்கட்டைப் பிடித்துப் பார்ப்பது ஏன்?

நம் இதயம் ஒரு முறை சுருங்கி விரிவதை ‘இதயத் இதயம் என்கிறோம். இவ்வாறு துடிப்பு’ என்கிறோம். ஒவ்வொரு முறை துடிக்கும் போதும் ஒருவித அழுத்தத்துடன் ரத்தத்தை மகாதமனி எனும் தமனி நாளத்தில் செலுத்துகிறது.

இது பல கிளைகளாகப் பிரிந்து உடலெங்கும் செல்கிறது. இதயத்தின் துடிப்பினால் ரத்தம் தமனிகள்(Artery) வழியாக ‘குபுக் குபுக்’ என்று இதயத்துடிப்பின் வேகத்திலேயே செல்கிறது.

தமனிகளின் விரல்களை வைத்து அதில் ரத்தம் செல்வதை உணரலாம். இதயத்தின் துடிப்பு வேகத்தையும் உணரலாம். இதுதான் நாடித்துடிப்பு.

கைகளின் மணிக்கட்டில், கழுத்தின் பக்கவாட்டில்,தொடையிடுக்குகளில், முழங்கால் மற்றும் கணுக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள தமனி வைத்தால் நாடித் துடிப்பை உணர இயலும்.

நாளங்களின் மீது விரல்களை அழுத்தமாக இதயத்துடிப்பும் நாடித் துடிப்பும் எண்ணிக்கையில் ஒன்றுதான். ஆகவே நாடித்துடிப்பை அளந்து
இதயத்துடிப்பின் தன்மையை மருத்துவர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

மணிக்கட்டில் கட்டை விரலுக்குக் கீழே ‘ஆரத்தமனி’ (ரேடியல் ஆர்ட்டரி) செல்கிறது. நாடித் துடிப்பை அறிய இந்த நாளத்தைத்தான் மருத்துவர்கள் மிக அதிகமாகப் பயன்படுத்துவார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles