கடந்த செப்டம்பரில் பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் மனித வாழ்நாளை குறிப்பிடத்தக்க அளவில் நீட்டிக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறு குறித்து பேசியதாகத் தோன்றியது.
“மனித உறுப்புகளைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்க முடியும். அதனால், ஒருவர் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் இளமையாக இருக்கலாம், மேலும் அழியாத் தன்மையைக் கூட அடையலாம்” என்று புதின் சார்பாக மாண்டரின் மொழியில் சீன அதிபரிடம் பேசிய ஒரு மொழிபெயர்ப்பாளர் கூறியதை கேட்க முடிந்தது.
“இந்த நூற்றாண்டில் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என்று ஷி ஜின்பிங்கின் மொழிபெயர்ப்பாளர் அதற்குப் பதிலளிப்பதையும் கேட்க முடிந்தது.ரஷ்யா மற்றும் சீனாவுக்கிடையிலான “நல்ல அண்டை நாடுகள் மற்றும் நட்புறவு ஒத்துழைப்பு ஒப்பந்தம்” கையெழுத்தாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, புதின் மீண்டும் பெய்ஜிங்கிற்கு வந்துள்ளார்.
கடந்த வாரம் டிரம்புடன் ஜோங்நான்ஹாய் வளாகம் வழியாக நடந்துசென்றபோது, பொதுவாக வெளிநாட்டு விருந்தினர்களுக்கு அனுமதி இல்லாத அந்த இடத்துக்கு முன்பே தனது நண்பர் புதின் வந்திருந்ததாக ஷி ஜின்பிங் நகைச்சுவையாக குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப், சீனாவை ரஷ்யாவிடம் இருந்து விலக்க முடியும் என்று அமெரிக்காவில் சிலர் நம்பியிருந்தாலும், அந்த நம்பிக்கை வெறும் கற்பனை போலவே தோன்றுகிறது.










