நாட்டு மக்களுக்காக போராடி தன் உயிரை மாய்தவர்கள் இந்தியாவில் ஏராளமானோர். அவர்களை தற்போது நினைத்தாலும் நம் நாட்டின் பெருமை உலகெங்கும் பேசப்படும்.

அதுபோல அரசுக்கு எதிராக தன் தரப்பு நியாத்தை எடுத்து கூற உண்ணாவிரத போராட்டத்தை கையில் எடுத்தவர் துருக்கி நாட்டை சேர்ந்த ஹெலன் போலாக். இவருக்கு வயது 28 . இவர் அந்நாட்டில் மிகவும் பிரபலமான “க்ரூப் யோரம்” என்ற இசைக்குழுவை நடத்தி வந்துள்ளார்.
அரசியல் ரீதியான கருத்துக்களையும், புரட்சி பாடல்களையும் கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமான இந்த இசை குழுவை கடந்த 2016 ஆம் ஆண்டு துருக்கி அரசு தடை செய்தது. அதுமட்டுமல்லாமல் அவர் குழுவை சேர்ந்த சிலரையும் சேர்த்து சிறையில் அடைத்தனர்.
இதன் பிறகு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அவர், தங்களின் இசைக்குழுவின் மீதான தடையை நீக்கவும், இசைக்குழுவினரை விடுவிக்கவும் உண்ணவிரதம் இருந்துள்ளார். இதனால் உடல் அளவில் பாதிக்கப்பட்ட அவரது புகைப்படம் உலகையே உலுக்கியது.

கடந்த 288 நாட்களாக தொடர்ந்த இந்த போராட்டத்தால், உடல் நலிவுற்ற ஹெலன் போலாக் நேற்று உயிரிழந்தார். இந்த இழப்பு அந்நாட்டில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.