மும்பை அணியின் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகும் முடிவை ஹர்திக் பாண்டியா எடுத்துள்ளார். இதனால் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்யும் முடிவுக்கு மும்பை அணி வந்துள்ளதாக தெரிகிறது.
இதனால் ஹர்திக் பாண்டியாவை வாங்க சிஎஸ்கே, கேகேஆர் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் வாங்க தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன.
நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி பொறுப்பில் இருந்து முழுமையாக விலக முடிவெடுத்துள்ளதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு சீசன்களாக ரசிகர்கள் மத்தியில் எழுந்த கடுமையான எதிர்ப்புகள், மன அழுத்தம் மற்றும் அணியின் தொடர் தோல்விகள் காரணமாக ஹர்திக் பாண்டியா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
ஹர்திக் பாண்டியாவை வாங்குவதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக ஆர்வம் காட்டி வருவதாக முன்னாள் வீரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.










