தமிழ்நாட்டில் சொந்தமாக வீடு கட்ட நினைக்கும் மக்களுக்கும், கட்டுமானத் துறையினருக்கும் விஜய் தலைமையிலான அரசு ஒரு மிகப்பெரிய குட்நியூஸை கொடுத்துள்ளது.
இனிவரும் காலங்களில் வீடு மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கான திட்ட மற்றும் கட்டிட அனுமதிகளை (Building Approval) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் ‘ஒரு’ குறிப்பிட்ட கால வரையறைக்குள் கட்டாயமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பை தொடர்ந்து புதிய விதிமுறைகளின்படி, பொதுமக்கள் சமர்ப்பிக்கும் கட்டிட அனுமதி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலிருந்து ‘முதலில் வருவோருக்கு முதலில்’ (First Come, First Served) என்ற முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
விண்ணப்பம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஐந்து வேலை நாட்களுக்குள் (5 Working Days) சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், கட்டிடம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்திற்கு நேரில் சென்று தங்களின் கல ஆய்வை (Field Inspection) எவ்வித காலதாமதமும் இன்றி கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பங்களை மாதக்கணக்கில் நிலுவையில் வைக்கும் அதிகாரிகளின் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.










