தமிழில் ஒரு நேரத்தில் கொடிகட்டி பறந்த நடிகை தான் பிரபல நடிகை ஹன்சிகா. ஹன்சிகாவை தமிழ் ரசிகர்கள் சின்ன குஷ்பூ என்று செல்லமாக கொண்டாடி வந்தனர். பார்க்க பபிலியாக அழகாகவும் இருந்ததால் ஹன்சிகாவிற்கு தமிழில் பெரிய மார்க்கெட் இருந்தது.

ஹன்சிகாவின் அந்த பப்ளி ஆன உடல்வாகு தான் அவருக்கு பெரிய பிளஸ் அதனை குறைத்து மெலிந்து காணப்பட்ட பின் ஹன்சிகாவிற்கு வரவேண்டிய அத்தனை பட வாய்ப்புகளும் மற்ற நடிகைகளுக்கு சென்றது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஹன்சிகா தன் உடல் எடையை குறைத்த பின் பட வாய்ப்புகளே இல்லாமல் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து வந்தார்.
இதற்கிடையில் சிம்புவுடன் காதல் கசந்து போக சில வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய தோழியின் கணவர் ஒருவரை விவாகரத்து பெற்ற பின் திருமணம் செய்து கொண்டார் என்ற செய்திகள் அந்த நேரத்தில் உலா வந்தது அனைவரும் அறிந்ததே.

சில நாட்களுக்கு முன்பு ஹன்சிகா தனது கனவு இல்லம் ஒன்றை கட்டி தனது கணவருடன் அந்த வீட்டிற்கு அடி எடுத்து வைத்துள்ளார். அந்த பிரம்மாண்ட வீட்டின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் ஹன்சிகா. ஹன்சிகாவின் பிரமாண்ட வீடு செம அழகாய் இருக்குல்ல.





