GV பிரகாஷ் அருமையான இசையமைப்பாளர் தற்பொழுது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் பெரிய வெற்றி பெற இல்லை என்றாலும் தொடர்ந்து ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து வருகிறார் GV .

பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட GV பிரகாஷுக்கு மகளும் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தான் மனைவி சைந்தவியை விவகாரத்து செய்தார். GV விவகாரத்திற்கு முக்கிய காரணம் அந்த நடிகை தான் என்று செய்திகள் வெளிவர தொடங்கியது.

BACHELOR என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த திவ்யா பாரதியுடன் GV சுற்றி வருகிறார். இருவருக்கும் காதல் என்றெல்லாம் செய்திகள் வந்தது. இதற்கு திவ்யா பாரதி தரப்பில் இருந்து இதற்கு மறுப்பு தெரிவித்தார்கள்.
ஏற்கனவே ஹீரோயின்களிடம் நெருக்கம் காட்டும் வகையில் GV நடித்து வருகிறார் என்ற பேச்சு இருக்க. தனது அடுத்த படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டார் GV.

அதில் Bathtub-ல் GV மற்றும் கதாநாயகி கயாடு லோஹர் ஒய்யாரமாக அமர்ந்து இருப்பது போல போஸ்டர்கள் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் அடுத்த GV டார்கெட் கயாடு லோஹர் தான் என்று கலாய்த்து வருகிறார்கள்.

கயாடு லோஹர் டிராகன் படத்தின் மூலம் பெரிய பிரபலத்தை அடைந்த கயாடு லோஹர் தற்பொழுது அடுக்கடுக்காக படங்களில் கமிட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.










