Friday, March 29, 2024
-- Advertisement--

விவசாயத்தில் களம் இறங்கிய IT ஊழியர்கள்…!!! இவர்களை பாராட்டியே ஆக வேண்டும் வாழ்த்துக்கள்.

விவசாயம் நமது நாட்டின் முதுகெலும்பு என்கிறார்கள் ஆனால் தற்பொழுது விவசாயிகளின் நிலை கேள்வி குறியாக உள்ளது. ஒரு பருகு சோற்றை நாம் சிந்துவதற்கு அல்லது வீண் ஆக்குவதற்கு முன்பு அந்த அரிசி எத்தனை விவசாயிகளின் உழைப்பினால் நமது தட்டிற்கு வந்தது என்பதை சிந்து பார்த்தால் போதும். வெயிலில் வேர்வை சிந்தி உழைக்கிறார்கள் நாம் சத்தான உணவை உண்பதற்காக மட்டும். மனதிற்கு ஒரு ஆறுதல் என்ன என்றால் விவசாயத்தின் அருமை புரிந்து IT தொழிலார்களும் களத்தில் இறங்கி விவசாயம் செய்ய தொடங்கிவிட்டனர்.

திருத்துறைப்பூண்டி என்ற ஊரை சார்ந்த சக்தி என்ற IT ஊழியரை நாங்கள் தொடர்பு கொண்டு சில விஷயங்கள் பேசினோம். அவர் கூறியது ஆச்சர்யமாக இருந்தது.

“Valam Community Farming” கோபிநாத் என்ற IT ஊழியர் இதனை தொடங்கினர். இது ஒரு கூட்டு விவசாயம் என்று சொல்லலாம். தனது நண்பர்கள் அனைவரும் ஒரு தொகையை ஷேர் செய்து விவசாய நிலத்தினை குத்தகைக்கு எடுத்து அந்த நிலத்தில் விவசாயம் செய்கின்றனர்.

இப்போது உள்ள காலகட்டத்தில் உணவுகளின் கலப்படம் அதிகம் ஆகி விட்டது. சத்தான உண்ணவை சாப்பிட்ட நமது முன்னோர்கள் அனைவரும் தாமே அதனை உற்பத்தி செய்து உண்டு வந்தார்கள். நாம் காலத்தை நோக்கியும், பணத்தை நோக்கியும் ஓடிக்கொண்டு இருப்பதால் நாம் நம் உடல் மேல் அக்கறை கொள்ளாமல் இருக்கின்றோம். இது நாம் வருங்கால சங்கதியினர்க்கும் கெடுதல் அதனால் வேலை முடிந்ததும் வார இறுதியில் இந்த நிலத்திற்கு வந்து இயற்கை முறை விவசாயம் செய்வோம் அதில் கிடைக்கும் லாபத்தை ஷேர் செய்து எங்கள் வீட்டிற்கு கொண்டு போவோம்.

நாங்கள் விவசாயம் செய்து எங்களுக்கு கிடைப்பதை விற்கமாட்டோம். நம் கையால் விதைத்து வந்த பொருளில் கலப்படம் இருக்காது அதனால் நாங்கள் எங்கள் அன்றாட வாழ்க்கையின் தேவைக்கு பயன்படுத்துவோம். நடவு நடுவதற்கு குடும்பம் குடும்பமாய் வந்து வேலை செய்வோம். சின்ன சின்ன குழந்தைகள் நாங்களும் நடவு செய்கிறோம் என்று ஆசைப்பட்டு கேட்பார்கள் அவர்களுக்கு மட்டும் அனுமதி கொடுப்போம்.

இதனை கேட்டவுடன் நமக்குள் தோன்றிய ஒன்று திரு.நம்மாழ்வார் அய்யா மற்றும் நெல் ஜெயராமன் அவர்களின் கனவு பலித்துவிடும் என்று. விவசாயம் வியாபாரம் அல்ல நமது வாழ்க்கைக்கு அவசியம் என்று புரிந்து கொண்டு IT ஊழியர்கள் இறங்கி விவசாயம் செய்வதை கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது.

தனது பிள்ளைக்கு விவசாயம் சொல்லி தரும் தந்தை

இவர்களை போல பல இடங்களில் இளைஞர்கள் விவசாயத்தை கையில் எடுத்து கொண்டு செய்து வந்தால் கலப்படம் நிறைந்த உணவுகளில் இருந்து நாம் மட்டும் அல்லாமல் நமது வருங்கால சங்கதிகளும் நோய் இல்லாமல் சத்துடன் வாழ்வார்கள்.

இந்த முயற்சியை எடுத்த “VALAM COMMUNITY FARMING ” நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். இது போல பல இடங்களில் செய்து கொண்டு இருக்கிறார்கள் சத்தம் இல்லாமல் அதற்கும் வாழ்த்துக்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles