Friday, April 19, 2024
-- Advertisement--

பெண்களின் பாதுகாப்பிற்காக அரசு பேருந்தில் மேலும் ஒரு சிறப்பான சலுகையை அறிவித்த தமிழக அரசு…!!! குஷியில் பொதுமக்கள்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிருக்கு மாநகர, நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பல பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அதோடு வேலைக்கு செல்லும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் தேர்தல் வாக்குறுதியில் மகளிருக்கு மாதம்தோறும் ஊக்கத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை மாறாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உயர் கல்வி படிப்பிற்காக மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெண்களுக்கு மேலும் ஒரு நற்செய்தியாக புதிய சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக படுக்கை எண் 1 LB மற்றும் 4LB ஒதுக்கீடு செய்து இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் அல்லது குளிர்சாதன பேருந்துகள் அனைத்தும் இந்த சலுகையில் பொருந்தும். எனவே இனிவரும் காலங்களில் பெண்கள் பேருந்துகளில் முன்பதிவு செய்யும்போது தனக்கென்று ஒதுக்கீடு செய்த படுக்கையில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

அதோடு பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட படுக்கையை சிலர் சமயங்களில் முன்பதிவு செய்யப்படாத போது அதனை பொதுபயன்பாட்டிற்காக மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்து தர வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை பெண்கள் பாதுகாப்பு மற்றும் நலனை கருதி தனி படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சலுகை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles