தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூபாய் 1,040 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.1,16,000க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம், ரூ.14,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சங்களை எட்டியது. புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் பணவீக்க அச்சங்கள் காரணமாக தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதிய முதலீட்டாளர்கள், பெருமளவில் கொள்முதல் செய்தனர்.
எனினும், தற்போது நிலைமை மாறி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றனஇன்று தங்கம் விலை குறையுமா? அல்லது அதிகரிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நகை பிரியர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 1,040 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.1,16,000க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம், ரூ.14,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது.










