கிச்சனில் தினமும் உணவு சமைப்பதால், வீட்டில் மற்ற இடங்களை விட கிச்சனில் அதிகப்படியான கறைகள் இருக்கக்கூடும். குறிப்பாக, சுவர்களில் எண்ணெய் பசை படிந்து கிரீஸ் போல் இருக்கும். இவை அழகை கெடுப்பது மட்டுமின்றி துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும்.
இவற்றை சாதாரண நீரை கொண்டு நீக்க முடியாது. அதேநேரம், விலை உயர்ந்த ரசாயனங்களும் வாங்க வேண்டாம். வீட்டில் இருக்கும் சில பொருட்கள் சரியாக பயன்படுத்தினால் கிச்சனை எளிதாக கண்ணாடி போல் ஜொலிக்க வைக்க முடியும்.
பேக்கிங் சோடா ஒரு சிறந்த காரத்தன்மை கொண்ட சுத்திகரிப்பானாக செயல்படுகிறது. அழுக்கு மற்றும் எண்ணெய் கிரீஸை எளிதாக நீக்கக்கூடும். இதனை சுவரில் உள்ள கறைகள் மேல் தடவ வேண்டும்.
சிறிது நேரம் கழித்து ஒரு பிரஷ் கொண்டு தேய்த்துவிட்டு, ஈர துணியால் துடைத்து எடுக்கவும்.சமையலறையில் உள்ள பிசுபிசுப்பான எண்ணெய் படலங்கள் மற்றும் விடாப்பிடியான கறைகளை நீக்க பயனுள்ளதாக வெள்ளை வினிகர்இருக்கும் என கருதப்படுகிறது.










