ஷெரில் இவர் கேரளாவில் மட்டும் அல்ல பிற மாநிலங்களிலும் ஒரே பாட்டில் பெரிய ஆள் ஆனவர். மோகன்லால் நடித்த “Velipadinte Pusthakam ” என்ற படத்தில் இடம் பெற்ற “ஜிம்மிக்கி கம்மல்” என்ற பாடல் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஷெரின் ஒரு கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அந்த கல்லூரியில் நடந்த விழாவிற்காக ஒத்திகை பார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. அந்த வீடியோவை பார்த்துவிட்டு யார் இந்த பெண் என்று தேட ஆரம்பித்தார்கள் ரசிகர்கள்.
அந்த வீடியோ வெளியாவதற்கு முன்பு எந்த ஒரு சோசியல் மீடியாவில் ஷெரில் இல்லை. அது மட்டும் அல்லாமல் அந்த வீடியோவில் ஷெரில் நடனத்தை பார்த்து அசந்து போன இயக்குனர் KS ரவிக்குமார் தரப்பில் இருந்து நடிக்க அழைத்தார்கள் ஆனால் ஷெரில் எனக்கு பிடித்தது ஆசிரியராக பணிபுரிவது அதையே தொடர்கிறேன் என்று மரியாதையுடன் கூறி உள்ளார்.

சமீபத்தில் ஷெரில் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதோ அந்த புகைப்படம்.




ஷெரிலின் “ஜிமிக்கி கம்மல்” வீடியோ 24 மில்லியன் பார்ப்பவையாளர்களை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
