Friday, March 29, 2024
-- Advertisement--

அப்பாவிற்கு பெருமை சேர்த்த மகன் யோஹன்…!!! கிரிக்கெட் வீராக அறிமுகம் ஆகிய கவுதம் மகன்…!!! குவியும் வாழ்த்துக்கள்.

இயக்குனர் கௌதம் மேனன் இவருடைய திரைப்படங்கள் தான் பல இயக்குனர்களுக்கு இன்ஸ்பைரேஷன் காரணம் இவர் படங்களில் வரும் காதல் காட்சிகள் கவிதை போல இருக்கும் அது போல இவர் படமாக்கும் விதம் வித்தியாசமாக இருக்கும் அதனாலேயே கௌதம் பல தோல்வி படங்களை கொடுத்த பின்பும் அவர் எடுத்த வெற்றிப்படங்கள் இன்றும் நின்று பேசுகிறது.

குறிப்பாக காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற மெகா ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் கவுதம் மேனன் வாழ்க்கையிலே மறக்கமுடியாத படமாக அமைந்தது.

நேற்றிலிருந்து யோகான் பற்றி செய்திகள் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது யோஹன் பற்றிய செய்திகள் என்றவுடன் தளபதி விஜய் அவர்களும் கவுதம் மேனனும் இணைந்து பணியாற்ற இருந்த யோஹன் அதியாயம் ஒன்று படத்தின் செய்தி என்று நினைக்க வேண்டாம் கௌதம் அவர்களின் மூத்த மகன் பெயர் ஆர்யா யோகன் இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளார்கள் ஒருவர் ஆர்யா யோஹன் மற்றொருவர் பெரியார் துருவ்.

தனது மூத்த மகனின் பெயரில் தான் விஜயின் யோஹன் அதியாயம் ஒன்று படத்தை தொடங்க இருந்தார் கவுதம் ஒரு சில விஷயங்களால் அந்தப்படம் நடக்கவில்லை அதுபோல தனது இரண்டாவது மகனின் பெயரில் விக்ரம் வைத்து துருவ நட்சத்திரம் என்ற படத்தை எடுத்துள்ளதாக கூறுகிறார்கள் இது ஒருபுறமிருக்க யோஹன் பற்றிய செய்திதான் தற்பொழுது வைரல் நியூஸ்.

கௌதம் மேனன் அவர்களின் மூத்த மகன் நேற்று நடந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் நேற்று சேலம் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் களமிறங்கிய யோஹன் 3 ஓவர்கள் பந்து வீசி 26 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் நேற்று பெரிய வைரலானது காரணம் அப்பா சினிமாவில் சாதித்தது போல மகன் கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கிறார் விரைவில் இந்தியாவிற்காக யோஹன் விளையாடுவார் அப்பாவை போல சாதிப்பார் என்று வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles