கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோதி, ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்றும் சமையல் எண்ணெயை குறைவாக பயன்படுத்துமாறும் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், பெட்ரோலிய துறை அமைச்சகம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் கையிருப்பு குறித்த தகவல்களை வழங்கியுள்ளது.
பெட்ரோலிய துறையின் இணை செயலாளர் சுஜாதா ஷர்மா செய்தியாளர் சந்திப்பில், “நமது சுத்திகரிப்பு நிலையங்கள் சிறப்பான திறனுடன் செயல்பட்டு வருகின்றனர்” என்றார்.
மேலும் அவர், “போதுமான பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளன. வீட்டுத் தேவைகளுக்கான எல்பிஜி விநியோகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.” எனவும் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், “இது பொருளாதார அவசரநிலையின் தொடக்கமா? நாடு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதா? முன்னெப்போதும் நாட்டில் இப்படி நடந்ததில்லை” என தெரிவித்தார்










