இலவச மென்பொருள்களின் வகைப்பாடுகள் நாம் பயன்படுத்தும் வணிக ரீதியான மென்பொருள்களுக்கு மாற்றாக பதிலாக பல இலவச மென்பொருள்களும் எவ்வித கட்டணமும் இல்லாமல் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன . பயனருக்கு சுலபமாகவும் , மிக எளிதாகவும் பயன்படும் இம்மென்பொருள்களை பற்றி இங்கு பார்ப்போம்.
கோஹா நூலக மென்பொருள் (koha library software)
கோஹா என்பது திறந்த நிலை நூலக இலவச மென்பொருள் ஆகும்.இதன் மூலம் ஒரு நூலகத்தின் விவரங்களை உள்ளீடு செய்து நூலகங்களை மின்-நூலகம் (E -library ) ஆக மாற்றலாம். புத்தகங்களின் விவரங்கள், விலை , புத்தக எண் (ISBN ) ,ஆசிரியர் ,பதிப்பகம் போன்றவற்றை சேமித்து வைக்கும் தரவு இடமாக கோஹா பயன்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு புத்தகங்களின் பார்க்கோடுகளை உருவாக்கி புத்தகங்களின் எண்ணிக்கையை
மிக சுலபமாக அறியலாம் .
இணைய முகவரி : https://koha-community.org
மீடியா விக்கி (Media Wiki)
இலவச இணையதளங்களை உருவாக்கப் பயன்படும் மென்பொருளாக மீடியா விக்கி செயல்படுகிறது.ஒரு ரூபாய் கட்டணமின்றி பல லட்சம் நபர்களை உங்கள் இணையதளம் சென்றடைய இந்த மென்பொருள் உதவுகின்றது.PHP மொழியை கொண்டு எழுதப்படும் இதன் நிரலானது அனைத்துவகை இயங்குதளங்களிலும் கிடைக்கின்றது .
மேலும் விவரங்களுக்கு : https://www.mediawiki.org/wiki/Download
ஜென்கின்ஸ் (Jenkins )
ஜென்கின்ஸ் மூலம் ஒரு மிகச்சிறந்த ப்ரொஜெக்ட்களை உருவாக்கலாம்.இது ப்ரொஜெக்ட்களின் கூறுகளை அறிந்து சோதனைகள் (Testing ) மூலம் நிரலில் ஏற்படும் பிழைகளை கண்டறிந்து நிறுவலாம்.பலவகை ப்ரொஜெக்ட்களை கையாள இந்த இலவச மென்பொருள் பயன்படுகின்றன. ஜாவா மொழியை கொண்டு எழுதப்படும் இந்த மென்பொருள் மூலம் பலவகை தானியங்கி (Automated ) மென்பொருள்கள் உருவாக்கப்படுகின்றன. அனைத்துவகை இயங்குதளங்களிலும் பயன்படுத்தலாம் .
www jenkins.io மூலம் விவரங்களை அறியலாம்.
லைம்சர்வே (Limesurvey )
லைம்சர்வே பயன்பாடு மூலம் இணையதள கணக்கெடுப்புகளை (Survey ) கண்டறியப் பயன்படுகிறது. இதன் மூலம் வணிக கணக்கெடுப்புகள், தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் சர்வே மென்பொருளாக இந்த லைம்சர்வே பயன்படுகிறது .
https://www.limesurvey.org/about-limesurvey/download இணையதளம் சென்று இச்செயல்பாட்டை தரவிறக்கலாம்.
இ -ப்ரிண்ட்ஸ் (e-prints)
இதுவும் இலவச மென்பொருளாகும்.இதன் மூலம் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் தரவுகளை சேமித்து வைக்கும் பெரிய இடமாக இ-ப்ரிண்ட்ஸ் மென்பொருள் உதவுகிறது.இதன் மூலம் பலவகை ஆராய்ச்சி கட்டுரைகள், கல்வி சம்பந்தமான தரவுகள்,நிரல்கள் போன்றவற்றை எவ்விதமான கட்டணமின்றி பெறலாம்.மேலும் இம்மென்பொருளை தரவிறக்க
www.eprints.org/uk/index.php/software இணையதளம் செல்ல வேண்டும்.
மூடெல் (moodle)
பலவகை கல்வி மற்றும் கம்பெனிகளில் பயன்படக்கூடிய மூடெல் திறந்த நிலை இலவச மென்பொருள் ஒரு மிக சிறந்த உள்ளடங்களை (content) கொண்ட பயன்பாடுகளை தோற்றுவிக்க உதுவுகின்றன .கல்வி மற்றும் பிற பயன்களை பல நபர்களை சென்றடைய இது ஒரு இடமாக , சேமிப்பு தரவாக இந்த மென்பொருள் பயன்படுகின்றன. பயனர் தமக்கு தேவையான விவரங்களை இந்த தளம் மூலம் அறியலாம். ஆசிரியர்கள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்வோர் தமக்கின் கீழ் பணிபுரியும் மற்ற பயனருக்கு பகிர இது ஒரு நடுநிலை மென்பொருள் பயன்பாடாய் உதவுகின்றது .
இதனை https://download.moodle.org/ இணையத்தளம் சென்று தரவிறக்கலாம்.
ட்ருப்பள் (Drupal )
ட்ருப்பள் என்பது PHP மொழிக் கொண்டு எழுதப்பட்ட ஒரு இலவச மற்றும் திறந்த நிலை உள்ளடக்க மேலாண்மை கட்டமைப்பாகும் (content management software) , இது GNU பொது உரிமத்தின் கீழ் விநியோகிக்கப்படுகிறது. தனிப்பட்ட வலைப்பதிவுகள் முதல் கார்ப்பரேட், அரசியல் மற்றும் அரசாங்க தளங்கள் வரை உலகெங்கிலும் உள்ள குறைந்தது. 2.3% வலைத்தளங்களுக்கான Dupal ஒரு பின்-இறுதி கட்டமைப்பை வழங்குகிறது.
இதனை https://www.drupal.org/download இணையதளம் மூலம் பெறலாம்.
வேர்ட்பிரஸ்(wordpress)
இதுவும் ஒரு இலவச மென்பொருள் ஆகும். பயனர் தமக்கு தேவையான இணைய
பயன்களை உருவாக்கி கொள்ளவும், இணையதளங்களை உருவாக்கி கொள்ளவும் , ப்ளாக்
(blog) க்களை எழுதவும் இந்த இலவச மென்பொருள் உதவுகின்றன.
மேலும் விவரங்களுக்கு : https://wordpress.org/download/
டி-ஸ்பேஸ் (D-space)
டி-ஸ்பேஸ் என்பது திறந்த மின்னணு களஞ்சியங்களை உருவாக்கும் கல்வி, இலாப நோக்கற்ற மற்றும் வணிக நிறுவனங்களுக்கான தேர்வுக்கான மென்பொருளாகும். கையாள மிக எளிதான மென்பொருளை கொண்டுள்ள இவை உரைகள் (text ), படங்கள் (images) ,நகரும் படங்கள்(gif ), எம்பெக் (mpeg )மற்றும் தரவுத் தொகுப்புகள் உள்ளிட்ட அனைத்து வகையான டிஜிட்டல் உள்ளடக்கங்களுக்கும் எளிதான மற்றும் திறந்த மென்பொருள்களை டி-ஸ்பேஸ் பாதுகாக்கிறது மற்றும் செயல்படுத்துகிறது.
மேலும் இதனை நிறுவ : https://duraspace.org/dspace/download/ இணையதளத்தை பார்வையிடவும்.
என்பிடெல் (NPTEL)
இந்த இலவச மென்பொருள் மூலம் எல்லாத்துறைகளிலும் உள்ள பாடங்கள் வீடியோ முறையில் பயிற்றுவிக்கப்படுகிறது. இல்லங்களில் உள்ளோர், மாணவர்கள் ,ஆசிரியர்கள் அனைவரும் இந்த மென்பொருள் மூலம் அனைத்துவகை பாடங்களையும் கற்கலாம்.சுமார் 10,000க்கும் மேற்பட்ட பாடத்தொகுப்புக்கள் இந்நூலகத்தில் உள்ளன.
இதனை https://swayam.gov.in/nc_details/NPTEL இணையம் சென்று பார்க்கலாம்
கட்டுரை : சி.ராம்பிரகாஷ் ,அண்ணா பல்கலைக்கழகம், திருக்குவளை