முதல் முதலாக மகளிருக்கு இலவச பேருந்து வசதி வழங்கியது டெல்லியில் தான். Arvind Kejriwal முதலமைச்சராக இருந்த போது அக்டோபர் மாதம் 29 ம் 2019 ஆம் ஆண்டு டெல்லி டிரான்ஸ்போர்ட் கார்பரேஷன் மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தை தொடங்கியது. பிங்க் நிற டிக்கெட் வாங்கிக்கொண்டு பெண்கள் இலவசமாக பயணம் செய்வார்கள். பெண்கள் சுகந்திரம் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்த திட்டம் பெண்களுக்குப் நல்ல பயன் அளிப்பது மட்டும் அல்லாமல் பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் விடியல் பயணம் என்ற பெயரில் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை துவங்கி நடைமுறைக்கு கொண்டு வந்து உள்ளார். தமிழ்நாட்டை தொடர்ந்து மற்ற மாநிலங்களும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.
பஞ்சாப்பில் 2021ம் ஆண்டு மகளிர் இலவச பேருந்து திட்டத்தை அம்ரிந்தர் சிங்க் ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்தார். AC பேருந்தை தவிர அனைத்து பேருந்திலும் இலவசம் என்று அறிவித்தார்.
இதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு கர்நாடகாவில் சித்தராமையா மகளிர் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்க்கு இலவச பேருந்து பயணம் SAKTHI SCHEME என்று அறிவித்துள்ளார் .
இந்த திட்டம் இந்தியா தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் பேருந்து திட்டம் எப்படி உள்ளது என்று உங்கள் கருத்தை கமெண்ட் செய்யுங்கள்.