தற்பொழுது சினிமாவில் வரும் வரவேற்பு விழா சீரியல்களுக்கு வரும் வரவேற்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. சினிமாக்களை தாண்டிய அளவிற்கு ரொமான்ஸ், சண்டைக்காட்சி உருவாக்கும் விதம் என அனைத்தும் சீரியலில் இருப்பதாலும் குறுகிய நேரத்தில் அனைத்து சுவாரசியமும் சீரியலில் இருப்பதால் மக்கள் சீரியலில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அதுவும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் தற்பொழுது மக்கள் மனதில் நல்லதொரு வரவேற்பு பெற்றுள்ளது.

விஜய் டிவியில் தினமும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியலில் ஒரு குடும்ப கதையை மையமாக வைத்து நான்கு அண்ணன், தம்பிகள் ஒரே கூட்டு குடும்பத்தில் எப்படி சண்டை சச்சரவு இல்லாமல் வாழ்க்கை ஓட்டுவது என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் நகர்ந்து வருகிறது.

இதில் முக்கிய கதாபாத்திரமாக கருதப்படுவது முல்லை கதிர் ஜோடி தான் இதில் முல்லையாக பிரபல பிஜே சித்ரா நடித்த பிறகு இதுவரை இரண்டு பேர் மாறிவிட்டனர். விஜே சித்ரா மறைந்த பிறகு முல்லை கதாபாத்திரத்தில் மற்ற நடிகைகளில் ஏற்க ரசிகர்கள் மிகவும் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

இந்த கதாபாத்திரத்தில் குமரன் கதிராகவே இதில் வாழ்கிறார் என்று கூறலாம். தற்பொழுது கதிர் அதிக கவனம் வெப் சீரியஸிலும் சினிமாக்களிலும் செலுத்தி வருவதால் சீரியலில் நடிக்க அவருக்கு நேரம் போதவில்லை என்பதால் இதில் சீரியலை விட்டு விலகுவதாக செய்தி வெளிவந்துள்ளது.

இதனால் முல்லை பிஜே சித்ரா கதாபாத்திரத்தில் இருந்து விலகிய பிறகு கதிரும் இந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகுவதால் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கும் என்று கூறப்படுகிறது.
