இந்திய சினிமாவில் முன்னணி பாடகர்களில் ஒருவர் பென்னி தயால். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பென்னி தயால் கலந்து கொண்டிருந்தார்.
அப்போது மாணவர்கள் முன்னிலையில் “ஊர்வசி ஊர்வசி” என்ற ஹிட் பாடலை பாடிக் கொண்டிருந்தார். அப்போது விழாவில் பங்கேற்று இருந்தவர்களை புகைப்படம் எடுக்க ட்ரோன் கேமரா பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பறந்து கொண்டிருந்த ட்ரோன் கேமரா பென்னி தயால் தலையில் மோதியது.
அவருக்கு தலையில் மற்றும் விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு பென்னி தயால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நேரடி நிகழ்ச்சிகளில் போது பங்குபெறும் கலைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எனக்கு ஏற்பட்டிருக்கும் காயத்தில் இருந்து விரைவில் குணமடைவேன் என நம்புகிறேன்.
Famous Indian singer Benny Dayal gets hit by a drone in VIT Chennai!#BreakingNews #BennyDayal #India pic.twitter.com/o4eK2faetF
— Aakash (@AakashAllen) March 2, 2023
மேலும் நேரிலையில் கலைஞர்கள் பங்கு பெரும்போது எந்தவித அசம்பாவிதம் நிகழாமல் இருக்க மூன்று பரிந்துரைகளை கூறுகிறேன். அதில் அனுமதிக்கப்பட்ட மற்றும் சான்றளிக்கப்பட்ட ட்ரோன் ஆப்ரேட்டர்களை மட்டுமே நிகழ்ச்சியில் ட்ரோனை இயக்க வேண்டும். மேலும் ட்ரோனை இயக்குவதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என வீடியோவில் பதிவிட்டுள்ளார்.