Thursday, April 25, 2024
-- Advertisement--

பிரபல சின்னத்திரை ஜோடி நவீன்-கண்மணி தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு…!!! குவியும் வாழ்த்துக்கள்.

தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்ற தொடரின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நவீன். பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து கண்மணி கர்ப்பமாக இருந்த சமயம் சமீபத்தில் வளைகாப்பு நடந்தது. அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் கண்மணிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த தகவலை நவீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் மகளின் கையைப் நவீன் பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை கண்மணி வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் குட்டி பட்டு பிறந்தாச்சு என பதிவில் வெளியிட்டுள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles