சமீபகாலமாகவே சினிமா பிரபலங்கள் இறந்த செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இன்று ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது.
பாலிவுட் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளருமான வாஜித் கான் சிறுநீரக தொற்றுக்கு கோளாறால் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வாஜித் கான் இன்று காலை காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை அவருடன் இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர் மற்றும் பாடகருமான சஜித் தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து 1998ல் பியார் கியா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இவர்கள் பாலிவுட்டில் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர். சல்மான்கான், அக்ஷய்குமார் ஆகியோருக்காக அண்மையில் பின்னணி பாடியுள்ளனர் குறிப்பிடத்தக்கது.