Wednesday, September 18, 2024
-- Advertisement--

செக் மோசடி வழக்கில் பிரபல இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறைத்தண்டனை உறுதி …!!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

செக் மோசடி வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அளித்த ஆறு மாத சிறை தண்டனை உறுதியானது. இயக்குனர் லிங்குசாமி மேற்கொண்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்பு இயக்குனர் லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.

அதில் 2014 ஆம் ஆண்டு லிங்குசாமி தயாரித்து இயக்கிய அஞ்சான் திரைப்படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதேபோல் 2015 ஆம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கமல் நடிப்பில் வெளியான உத்தம வில்லன் படமும் சரியாக ஓடவில்லை. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

மேலும் 2014 ஆம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல் என்ற நிறுவனத்திடம் சுமார் 1.3 கோடி கடன் பெற்றிருந்தது. இந்த பணத்தை உரிய நேரத்தில் செலுத்தாததால் லிங்குசாமி நிறுவனம் மீது பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி லிங்குசாமி சம்பந்தப்பட்ட தொகைக்கு காசோலையாக வழங்கினார்.

ஆனால் அவை வங்கியில் போதிய அளவு இல்லாததால் திரும்ப வந்தது. இதனால் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்கள் பெயரில் பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் வழக்கு செக் மோசடி தொடர்ந்தது. இந்த வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறு மாத சிறதண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை எதிர்த்து லிங்குசாமி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம். இதனால் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத சிறதண்டனை உறுதியானது. மேலும் கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles