Saturday, April 20, 2024
-- Advertisement--

கம்ப்யூட்டர் செல்போன் அதிகம் பயன்படுத்துபவர்களா நீங்கள்..?உடனே இதை செய்யுங்கள்.

நம் அன்றாட வாழ்க்கையில் நமது கண்ணனுக்கு நிறைய வேலையை கொடுத்து வருகின்றோம். இளம் வயதிலே பார்வை திறன் குறைய ஆரம்பித்து வருகிறது.

கம்பியூட்டரில் தினமும் நேரக்கணக்கில் வேலை செய்பவர்கள் தங்களது கண் மீது முக்கியமாக அக்கறை கொள்ள வேண்டும் .

முன்பெல்லாம் செல்போனில் அதிக நேரம் செலவிடாத நாம் செல்போன் டெக்னாலஜி வளர வளர நாம் செல்போன் பயன்படுத்தி கானுக்கு ஓய்வு கூட கொடுப்பதில்லை.

இது போன்ற சில காரணங்களினால் பார்வையை திறன் சீக்கிரமே பாதிக்கப்பட்டு கண்ணாடி போடும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

கண்ணுக்கு அதிகம் வேலை தரும் நாம் கொஞ்ச நேரங்கள் சில பயிற்சிகளை தினமும் அல்லது வாரத்திற்கு 3 நாட்கள் செய்து வந்தால் நமது கண்ணின் பார்வையை சரி செய்யலாம்.

அதில் ஒன்று தான் தீப ஒளி பயிற்சி

கண்பார்வை மேம்பட தீப ஒளி பயிற்சி பயன்படும். வெளிச்சம் இல்லாத ஒரு அறையில் விளக்கு தீபத்தின் சுடரை உற்று நோக்கும் பயிற்சி தீப ஒளி பயிற்சி.

நமது கண்கள் பார்க்கும் உயரத்தில் 2 அடி தூரத்தில் தீபம் ஒன்றை ஏற்றி அதன் சுடரில் கவனத்தை செலுத்த வேண்டும். அதிக உயரமான இடத்தில் தீபத்தை வைத்தால் கண் எரிச்சல் ஏற்படும்.

இன்று பலரும் இப்பயிற்சியை மெழுகுவர்த்தி கொண்டு செய்வதுண்டு. நல்ல பசு நெய், அல்லது விளக்கெண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய் கொண்டு விளக்கேற்றி கண்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும்.

பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து ஏற்றிய தீபத்தின் ஒளியை கண் இமைக்காமல் கவனத்தை அதில் செலுத்த வேண்டும். தீப ஒளி மூன்று அமைப்பாக இருக்கும்.

ஒளியில் அடிப்பகுதி சிவப்பு நிறத்திலும், மத்தியில் தங்க நிற மஞ்சளாகவும், நுனிப்பகுதி சாம்பல் நிற புகையாக இருக்கும். நன்கு தங்க நிற வெளிச்சத்தை கண் இமைக்காமல் பார்த்து மனதின் கவனத்தை அதில் செலுத்த வேண்டும்.

ஆரம்ப காலத்தில் 10 – 15 வினாடி மட்டுமே தீப ஒளி பார்க்க இயலும். கண்களில் நீர்வடிந்து, அசௌகரியம் ஏற்படும்பொழுது கண்களை மூடி தீப ஒளியை மனக்கண்ணில் பார்க்க வேண்டும். அந்த தீப ஒளி மறையும் வரை பயிற்சி செய்ய வேண்டும்.

நன்கு பயிற்சி பெற்ற ஒருவரால் தீப ஒளியை 1 நிமிடம் வரை கூட கண் இமைக்காமல் பார்க்க முடியும்.

ஒளி பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

கண் பார்வை மேம்படும்.
கண்களில் தசைகள் பலப்படும்.
மன அமைதி பெறும்.
நினைவாற்றல் கூடும்.

தீப ஒளி பயிற்சி முறை:

தீபம் ஏற்றுதல். தீப ஒளியை 10-15 வினாடி உற்று நோக்குதல். கண்களை மூடி தீப ஒளி பிம்பத்தை தியானித்தல் (1நிமிடம்). கண் விழித்தல்

இப்பயிற்சி செய்து முடிந்ததும் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அமைதியான சூழலில் கண்களை மூடி ஓய்வெடுத்தல் நன்று.

இதையும் படிங்க :இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பழம்…? ஒரே பழத்தில் இவ்வளவு நன்மையா..!!!
    
இதையும் படிங்க : வசீகரமான முகத்தோற்றத்தை பெற ஆரோக்கியமான வழி முறைகள் இதோ..!!! TRY பண்ணி பாருங்களேன்..!!!

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles