சென்னை: நடிகர் நெப்போலியன் மகனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு ஜப்பானில் நெப்போலியனின் மருமகள் மற்றும் மனைவி ஷாப்பிங் சென்ற வீடியோ இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.
நடிகர் நெப்போலியன் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர்.எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி போன்ற திரைப்படங்கள் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர். அந்த திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது.80ஸ் காலத்திலும் 90ஸ் காலகட்டத்திலும் பல திரைப்படங்களில் நடித்து வந்த நெப்போலியன் அரசியலிலும் காலடி எடுத்து வைத்து அதிலும் முக்கிய பிரபலமாக வலம் வந்தார். எம்எல்ஏவாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய நெப்போலியன் மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். பின்னர் அவர் தனது மூத்த மகனுக்கு நடப்பதில் பிரச்சனை இருப்பதை அறிந்து இந்தியாவில் சிகிச்சை செய்து சரியே வரவில்லை என்று அமெரிக்காவில் சிகிச்சை அளித்து வந்தார் அந்த நிலையில் தன்னுடைய மகன் ஆசைப்பட்டதற்காக சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
நெப்போலியன் மூத்த மகன் தனுஷ்க்கு தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 10 வயதில் இருந்தே அவரால் எழுந்து நடக்க முடியவில்லை ஆனாலும் தன்னுடைய மகன் சந்தோஷத்தை மட்டுமே முக்கியமாக கருதும் நெப்போலியன் தன்னுடைய மகனோடு எடுக்கும் வீடியோக்களை அவ்வப்போது இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் தான் தன்னுடைய மகனுக்கு பிரமாண்டமாக திருமணத்தை நடத்தி வைத்தார். நெப்போலியன் அமெரிக்காவில் வசித்து வந்தாலும் ஜப்பானில் திருமணத்தை நடத்த வேண்டும் என்று மகன் ஆசைப்பட்டதனால் அங்கேயே திருமணத்தை நடத்தி இருந்தார். ஆனால் இந்த திருமண செய்தி இணையத்தில் வெளியானதுமே அதிகமான விமர்சனங்களும் வந்துவிட்டது.
அதற்கு காரணம் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கு நெப்போலியன் திருமணம் செய்து வைத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கிறார், என்றெல்லாம் பலரும் பேசி வந்தனர்.
நெப்போலியன் மருமகள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தான் வசதிகளை பார்க்கவில்லை நல்ல குணத்துடன் உள்ள என் மருமகளை தான் பார்க்கின்றேன் என்று கூறியுள்ளார் இதன் குறித்து நெப்போலியன் மருமகள் இடைய கேட்டபோது அவர் இந்த திருமணத்தை விருப்பப்பட்டு செய்து கொள்வதாகவும் தன்னை யாரும் வற்புறுத்தவில்லை என்றும் பேட்டிகளில் பேசி இருந்தார்.ஆனாலும் தொடர்ச்சியாக இது பற்றிய விமர்சனங்கள் இருந்து வருகிறது. இந்த நிலையில் மகனின் திருமணத்திற்கு பிறகும் மூன்று மாதங்கள் ஜப்பானிலேயே இருப்பதாக நெப்போலியன் அறிவித்திருந்தார். அதுபோலவே ஜப்பானில் பல இடங்களில் தன்னுடைய குடும்பத்தோடு நெப்போலியன் சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார்.
அப்போது நெப்போலியனின் மருமகள் மற்றும் மனைவி இருவரும் ஒரே கலர் உடையில் வலம் வரும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த க்யூட்டான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நெப்போலியன் தன்னுடைய மருமகள் தான் எங்களுடைய வீட்டின் குலசாமி இனி அவள்தான் எங்களுக்கு மறு மகள் என்று தெரிவித்திருந்தார்.
அது போலவே இப்போது தன்னுடைய மகளைப் போலவே மருமகளை நெப்போலியனும் அவருடைய மனைவியும் கவனித்துக் கொள்ளும் அழகான தருணங்கள் அந்த வீடியோவில் இருக்கிறது.